Published : 27 Nov 2023 04:24 AM
Last Updated : 27 Nov 2023 04:24 AM
ரயில் வண்டியின் கடைசிப் பெட்டியில் ‘X’ என்று எழுதப்பட்டிருக்கிறதே ஏன், டிங்கு? - தா. லோகேஸ்வரி, 10-ம் வகுப்பு, எஸ்.ஆர்.வி. பப்ளிக் பள்ளி, பிராட்டியூர், திருச்சி.
ரயிலின் கடைசிப் பெட்டி என்பதைக் குறிக்கும் விதத்தில் X என்று மஞ்சள் நிறத்தில் எழுதப்பட்டிருக்கும். X மட்டுமின்றி அதுக்குக் கீழே சிவப்பு விளக்கும் அருகில் LV (Last Vehicle) என்கிற எழுத்துகளும் காணப்படும். சிவப்பு விளக்கு எரிந்தால் அது இரவு நேரம். அந்த வெளிச்சத்தில் X எழுத்து பளிச்சென்று தெரியும். பகலில் விளக்கு இல்லாமலேயே X நன்றாகத் தெரியும், லோகேஸ்வரி.
சூரியன் ஏன் கிழக்கில் உதிக்கிறது, டிங்கு? - ஆர். நர்மதா குமாரி, 7ம் வகுப்பு, பிச்சாண்டி நடுநிலைப் பள்ளி, போடிநாயக்கனூர், தேனி.
சூரியன் உதிப்பதும் இல்லை, மறைவதும் இல்லை. அது எப்போதும் ஒளியையும் வெப்பத்தையும் உமிழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. சூரியனை மையமாக வைத்து பூமிஉட்பட சூரியக் குடும்பத்தில் உள்ள கோள்கள் சுற்றி வருகின்றன. பூமி தானும் சுற்றிக்கொண்டு, சூரியனையும் சுற்றி வருகிறது. அப்படிச் சுற்றும்போது இரவு, பகல் ஏற்படுகிறது என்பது உங்களுக்குத் தெரியும். பூமி கிழக்கு திசை நோக்கிச் சுற்றுவதால் சூரியன் கிழக்கில் உதிப்பதுபோல் நமக்குத் தோன்றுகிறது. தெற்கு திசை நோக்கியோ வடக்கு திசை நோக்கியோ சுற்றினால் சூரியன் அந்தத் திசையில் உதிப்பதாகத் தோன்றும், நர்மதா குமாரி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT