கொஞ்சம் technique கொஞ்சம் English 245: Confusing words - தொலைந்ததா இல்லை தளர்ந்ததா!

கொஞ்சம் technique கொஞ்சம் English 245: Confusing words - தொலைந்ததா இல்லை தளர்ந்ததா!
Updated on
2 min read

இனியன்: பாட்டி எனக்கு Lose, Loose இந்த ரெண்டு வார்த்தையை பார்க்கும் போது இது வருமா அது வருமா ன்னு எப்பவுமே தடுமாறுவேன்.

மித்ரன்: நானும் தான். இதை எப்படி நாங்க correct செய்யணும்ன்னு சொல்லிக்கொடுங்க பாட்டி.

பாட்டி: இந்த இரண்டு வார்த்தைகளைப்பற்றி உங்களுக்கு தெரிந்தது எல்லாம் சொல்லுங்க பார்க்கலாம்.

உமையாள்: Lose என்பது ஒரு verb.

இசை: Loose என்பது ஒரு adjective.

உமையாள்: லாஸ் (Lose) என்று உச்சரிக்க வேண்டும்.

இசை: லூஸ் (Loose) என்று உச்சரிக்க வேண்டும்.

உமையாள்: தோல்வி அல்லது பின்னடைவு சமயங்களில் Lose என்ற வார்த்தையை பயன்படுத்தலாம்.

இசை: உறுதியாகப் பிடிக்கப்படாத அல்லது பிணைக்கப்படாத விஷயங்களைக் குறிக்க Loose என்ற வார்த்தையை பயன்படுத்தலாம்.

பாட்டி: ரெண்டு பேரும் அருமையாக சொன்னீங்க

மித்ரன்: Lose என்பது verb என்றால் , அதுக்கு past tense, past participle இருக்கும் தானே?

பாட்டி: Lose – present

Lost – past

Lost – past participle

இனியன்: Loose என்பது adjective என்றால், அதோட degrees எல்லாம் எப்படி இருக்கும்?

பாட்டி: Loose – positive degree

Looser – comparative degree

Loosest – superlative degree

(தொடரும்)

- கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in