பூ பூக்கும் ஓசை - 20: கார்பன் வெளியிடாத புதிய வாழ்க்கை முறை வேண்டும்

பூ பூக்கும் ஓசை - 20: கார்பன் வெளியிடாத புதிய வாழ்க்கை முறை வேண்டும்

Published on

சுற்றுச்சூழலில் கார்பன் உமிழ்வையும்கட்டுப்படுத்தி, அதேசமயம் மக்களின் தேவையையும் நிவர்த்தி செய்ய நம்மால்முடியும். இந்தச் செயல்முறையைத்தான் நாம் கரிம நீக்கச் செயல்பாடு (Decarbonizing) என்கிறோம். அதாவது நமது வாழ்க்கை முறையை கார்பன் வெளியிடாத தொழில் நுட்பங்களைச் சார்ந்து மாற்றிக் கொள்ள வேண்டும். கார்பன் வெளியிடப்படும் துறைகளான மின்துறையில் புதைபடிம எரிபொருளுக்கு மாற்றாகச் சூரிய ஆற்றல், காற்றாற்றல் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்த வேண்டும். தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் கரியமில வாயுவை பிடித்து வைக்கவேண்டும். போக்குவரத்தில் எரிபொருளுக்கு மாற்றாக மின்சாரத்தைப் பயன்படுத்த வேண்டும். இப்படிப் பல தொழில்நுட்ப மற்றும் வாழ்வாதார மாற்றங்களைச் செய்ய வேண்டும்.

இதற்கான முயற்சிகள் ஏற்கெனவே நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. குறிப்பாக மின் உற்பத்தியில் கரிம நீக்கச் செயல்பாடு நீண்ட காலமாகவே பின்பற்றப்பட்டு வருகிறது. இன்று மனித வாழ்வே மின்சார மயமாகிவிட்டது. உலக அளவில் ஒரு மணி நேரத்துக்கு 22,000 டெரா வாட்ஸ் அளவு மின்சாரத்தை நாம் பயன்படுத்தி வருவதாகத் தரவுகள் கூறுகின்றன. அவ்வளவு மின்சாரமும் பெரும்பாலும் புதைபடிம எரிபொருளைக் கொண்டே தயாரிக்கப்படுகின்றன.

நாம் ஏற்கெனவே பார்த்ததுபோல 26% பசுமைக்குடில் வாயு வெளியேற்றம் மின்சார உற்பத்தியின் போதே வெளியிடப்படுகிறது. அதனால் மின்சார உற்பத்தியில் முதலில் கரிம நீக்க செயல்பாடுகளை மேற்கொள்வது கார்பன் உமிழ்வை வெகுவாகக் குறைத்துவிடலாம் என்கிறனர் ஆய்வாளர்கள். மேலும் மற்ற துறைகளும் மின்சாரத்தை நம்பியே இருப்பதனால் அவற்றிலும் இதன் தாக்கம் எதிரொலிக்கும் என்று சொல்லப்படுகிறது. சரி, மின்சார உற்பத்தியில் என் னென்ன கரிமநீக்கச் செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன? அவற்றைப் பயன்படுத்தி நாம் முழு மையாக புதைபடிம எரிபொருளிலிருந்து விலக்கு பெற முடியுமா? அடுத்த வாரம் பார்க்கலாம்.

(தொடர்ந்து யோசிப்போம்)

- கட்டுரையாளர்: அறிவியல், சூழலியல், தொழில்நுட்பம் குறித்து எழுதி வரும் இளம் எழுத்தாளர். ‘மிரட்டும் மர்மங்கள்’ நூலாசிரியர்; தொடர்புக்கு: tnmaran25@gmail.com

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in