

அகலிகை தாய் தந்தை இல்லாத பெண். கண் தெரியாத பாட்டி தான் வளர்த்து வந்தாள். அகலிகைக்கு ஓவியம் வரைவது மிகவும் பிடிக்கும். ஒரு நாள் பாட்டியோடு விறகு வெட்ட காட்டுக்கு சென்றாள். அங்கே குரங்குஅதன் குட்டியை மடியில் அள்ளி அணைத்தபடி வருவதைப் பார்த்து அசந்து போனாள். யானை தன் குட்டிகளோடு கூட்டமாக வரிசையாக செல்வதைப் பார்த்தாள். மான் கூட்டமாக துள்ளி ஓடுவதையும் பார்த்துக் கொண்டே யோசித்தாள். இவர்கள் எல்லாம் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். நமக்கு தான் பெற்றோர் இல்லை என்று ஏங்கினாள்.
அதற்குள் பாட்டி அகலிகையை அழைத்தார். இருவரும் வீட்டிற்கு சென்றனர். தான் கண்ட காட்சியை ஓவியம் ஆக்க நினைத்து ஒவ்வொன்றாக வரைந்தாள். அதில் ஒன்று இதயத்தில் அம்மா அப்பா வுடன் இணைந்து இருப்பதில் அம்மா முத்தமிடும் காட்சியும் இருந்தது. அடுத்த நாள்பள்ளிக்கு சென்று ஆசிரியரிடம் காட்டினாள்.
ஆசிரியர் பாராட்டி விட்டு பள்ளி கலையரங் கத்தில் காட்சிப்படுத்தினார். சிறப்பு விருந்தின ராக வந்த செல்வந்தர் இதயத்தில் பெற்றோர் வரையப்பட்ட ஓவியத்தைப் பார்த்து ரசித்துவிட்டு விவரம் அறிந்தார். அந்த பெண்ணை அழைத்து வரச் சொன்னார். காணாமல் போனஅகலிகையைப் பார்த்து உச்சி முகர்ந்தார். நாம் அனாதை இல்லை என்பதை உணர்ந்தாள். பள்ளியில் ஆசிரியர்களும் தோழிகளும் மகிழ்ச்சி அடைந்தனர். பாட்டியையும் அழைத் துக் கொண்டு தந்தையோடு சென்றாள்.
ஓவியமே நம்மை இணைத்து உள்ளது. நம் திறமை எங்கு வேணாலும் கொண்டு செல்லும் ஆற்றல் உடையது என்பதை உணர்ந்தாள். இதைத்தான் வள்ளுவர் நமக்குக் கொடுத்து வைக்காதவை எவ்வளவு தான் வருந்தினாலும் நம்மிடம் வாரா. நமக்குரியவை தூக்கி எறிந்தாலும் நம்மை விட்டுப் போகா என்பதை
பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்
சொரியினும் போகா தம. - குறள்:376
(அதிகாரம்:38 ஊழ்)
- கட்டுரையாளர்: பள்ளி ஆசிரியர்