Published : 20 Nov 2023 04:22 AM
Last Updated : 20 Nov 2023 04:22 AM
14 நாட்களை ஆங்கிலத்தில் Fortnight என்கிறார்கள். இது எப்படி வந்தது, டிங்கு? - எஸ். ஹரிஹரசுதன், 9-ம் வகுப்பு, எஸ்.ஆர்.வி. மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி, சமயபுரம்.
ஃபோர்ட்நைட் என்பது இங்கிலாந்திலும் ஸ்காட்லாந்திலும் ஆங்கில மொழி பேச ஆரம்பித்தபோது தோன்றிய வார்த்தை. இதற்கு 14 இரவுகள் என்று அர்த்தம். அதைப் பின்னர் 2 வாரங்கள் அல்லது 14 நாட்களைக் குறிப்பதற்கு பயன்படுத்திக் கொண்டனர். வட அமெரிக்காவில் ஃபோர்ட்நைட்டுக்குப் பதில் Biweekly என்கிற வார்த்தையைப் பயன்படுத்துகிறார்கள், ஹரிஹரசுதன்.
தேன், பேனா மை, குங்குமம் போன்றவற்றைத் தலை முடியில் தேய்த்தால் நரைத்து விடுமா, டிங்கு? - ஜெ.ஆ. மலர்விழி, 9-ம் வகுப்பு, ஆக்ஸிலியம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, தஞ்சாவூர்.
தேன், மை, குங்குமம் போன்றவற்றை ஏன் தலையில் தேய்க்க வேண்டும், மலர்விழி? அழுக்கு தலையில் தேன் தடவினால் இன்னும் முடி சிக்கலாகவும் பிசுபிசுப்பாகவும் ஆகிவிடாதா? தற்செயலாக தேன், மை, குங்குமம் முடியில் பட்டால் நரைத்துவிடாது. ஆனால், மையும் குங்குமமும் தரமானதாக இல்லை என்றால், ஏதாவது ரசாயனம் கலக்கப்பட்டிருந்தால் காலப்போக்கில் நரைக்கும் வாய்ப்பிருக்கிறது. நீங்கள் தினமும் இவற்றை முடியில் தடவப் போவதில்லை என்பதால், நரைக்கும் என்ற கவலையை விட்டுவிடுங்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT