Published : 14 Nov 2023 04:16 AM
Last Updated : 14 Nov 2023 04:16 AM
எக்கா, ஆசிரியைக்கு மீன் கொடுக்கச் செல்கிறாள். அவர் திட்டுவார் என்று பயம். தலை குனிந்து நிற்கிறாள். ஆசிரியை புன்முறுவலோடு கணக்கில் சில கேள்விகளைக் கேட்கிறார். சிறிது யோசித்த பிறகு சரியான பதில்களைக் கூறுகிறாள் எக்கா. ஆசிரியைக்கு அளவில்லா ஆனந்தம். ஆசிரியை எக்காவின் அப்பா சாலமனைத் தேடிச் சென்று பார்க்கிறார். "உங்க மகளை இந்த ஊரே கொண்டாடப் போகுது. நான் பாடம் நடத்தும்போது சுவர்இடைவெளி வழியாகவே படிச்சிருக்கா. இன்று நான் கேட்ட கடினமான கணக்குகளுக்கும் சுலபமா பதில் சொன்னாள். அவளைப் பள்ளிக்கு அனுப்பினா ரெம்ப நல்லது." என்று கூறுகிறார். சாலமனுக்கு அதிர்ச்சி. ஒரு பக்கம் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. சாலமனின் அண்ணன் லூகாஸ் அருகில் இருக்கிறார். "தம்பி, உன் வீட்டுக்கு மட்டும் ஏன் படிப்பால அடிக்கடி கெட்டது நடக்குது? முதலில் உன் மனைவி. இப்போ உன் மகள்." என்று சொல்கிறார். கோபத்தால் சாலமனின் உடல் துடிக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT