

திரையரங்கில் சினிமா பார்த்துவிட்டு திரும்பிய ஷீஸ்லிக்கு பாராசூட்டில் பறக்க வேண்டும் என்று ஆசையாக இருந்தது.பெற்றோரிடம் அழைத்து போகச் சொல்லி கேட்டுக் கொண்டே இருந்தாள். உன்னுடைய பிறந்த நாளுக்கு அழைத்துச் செல்கிறோம் என்றார்கள். நேரு மாமா பிறந்த நாள் தானே என்னுடைய பிறந்த நாள் வருகிறது ஆஹா நாடே என் பிறந்த நாளை கொண்டாடுமே. என்று ஆனந்தமாக பேசினாள். ஷீஸ்லியை அழைத்துக் கொண்டு கோவாவிற்கு பயணம் செய்தார்கள். அவளின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
கனவு கண்ட நாளும் வந்தது. பாராசூட்டில் ஏறி சாகசம் செய்யப் போகிறோம் என்று மகிழ்ச்சியாக ஏறினாள். அடுத்த நொடி படபடத்தது. துணிவை வரவழைத்துக் கொண்டு கல்பனா சாவ்லா ஆன்டி விண் வெளிக்கு போகும் போது நம்மைப் போல் பயந்து இருந்தால் சாதனை செய்து சரித்திரத்தில் இடம் பிடித்து இருப்பார்களா? என்று தனக்குத் தானே கேட்டுக் கொண்டு கடற்கரை அழகையும் பறவைகள் பறக்கும் அழகையும் வானத்தை தொட்டும் விடும் தூரத்திலும் கண்டு ரசித்தாள். பாராசூட் பயணத்தை முடித்துக் கொண்டு தரை இறங்கினாள்.
ஆகாயத்தை பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டு பறவைகளுக்கு நடுவானில் தங்கும் கூடாரத்தைக் கண்டுபிடித்து இளம் விஞ்ஞானி பட்டம் பெற்றாள். பெற்றோர்க்கு பெருமை சேர்க்கும் பிள்ளை யானாள். குழந்தை தின விழாவை அன்று மட்டும் கொண்டாடாமல் தினமும் கொண்டாடும் குழந்தை ஆனாள்.
இதைத்தான் வள்ளுவர்
தம்மின் தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது
(அதிகாரம்: 6 மக்கட்பேறு: குறள்;68)
- கட்டுரையாளர்: பள்ளி ஆசிரியர்