வேலைக்கு நான் தயார் - 20: எதிர்காலத்தை பிரகாசமாக்கும் பிளாஸ்டிக் படிப்புகள்

வேலைக்கு நான் தயார் - 20: எதிர்காலத்தை பிரகாசமாக்கும் பிளாஸ்டிக் படிப்புகள்
Updated on
1 min read

இன்று நாம் அன்றாடம் பயன்படுத்தும் பெரும்பாலான பொருட்களில் பிளாஸ்டிக் அதிக அளவில் உள்ளது. சமையலறை பொருட்கள் முதல் இருசக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம், விமானம் வரை அதன் ஊடுருவல் அதிகம். ஆகவே இத்துறையில் படித்து வருபவர்களுக்குப் பிரகாசமான எதிர்காலம் நிச்சயம்.

பிளாஸ்டிக் தொழில்நுட்பம் குறித்த படிப்புகள், பி.டெக் பிளாஸ்டிக் டெக்னாலஜி, பி.இ. பிளாஸ்டிக் இன்ஜினியரிங், டிப்ளமா படிப்புகளாகவும் குறுகிய கால திறன் பயிற்சிகளாகவும் வழங்கப்படுகிறது. பி.டெக் பட்டப்படிப்பாக பிளாஸ்டிக் டெக்னாலஜியினை நாடு முழுவதுமுள்ள சென்ட்ரல் இன்ஸ்டிடியூட் ஆஃப் பிளாஸ்டிக் இன்ஜினியரிங் அண்டு டெக்னாலஜி (CIPET - சிபெட்) வழங்குகிறது. இது மத்திய அரசின் கல்வி நிறுவனமாகும்.

தமிழ்நாட்டை பொறுத்தவரை சிபெட் எனப்படும் மத்திய பிளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கழகம் சென்னை கிண்டியிலும் மதுரையிலும் உள்ளது. சென்னையில் பி.டெக் பிளாஸ்டிக் டெக்னாலஜியும், பி.டெக் மானுஃபாக்சரிங் டெக்னாலஜியும் வழங்கப்படுகிறது.

இதனைத் தவிரவும் குறுகிய காலத் திறன் பயிற்சிகளாக 1) மிஷின் ஆப்ரேட்டர் அசிஸ்டென்ட் பிளாஸ்டிக்ஸ் ப்ராசசிங் (Machine Operator Assistant Plastics Processing), 2) மிஷின் ஆப்ரேட்டர் அசிஸ்டென்ட் இன்ஜெக்ஷன் மோல்டிங் (Machine Operator Assistant Injection Moulding), 3) சிஎன்சி லேத், 4) அட்வான்ஸ்டு பிளாஸ்டிக் மோல்டிங் மானுஃபாக்சரிங் அசிஸ்டென்ட் ஆகிய மூன்று மாத கால திறன் பயிற்சிகள் வழங்கப்படுகிறது.

இத்திறன் பயிற்சிகள் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மூலம் வழங்கப்படுகிறது. பயிற்சிக் கட்டணம் தங்குமிடம், உணவு இலவசமாகும். எனவே தங்களுக்கு வசதியான ஒன்றை தேர்ந்தெடுக்கவும்.

உயர்கல்வி, வேலைவாய்ப்பு தொடர்பான உங்களது சந்தேகங்களை ‘வேலைக்கு நான் தயார்’ பகுதிக்கு vetrikodi@hindutamil.co.in என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி நிபுணரின் வழிகாட்டுதல் பெறுங்கள்.

- கட்டுரையாளர்: வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை முன்னாள் இணை இயக்குநர்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in