கதை கேளு கதை கேளு 47: வித்தியாசம்தான் அழகு!

கட்டுரையாளர்: குழந்தை நேய செயற்பாட்டாளர், ஆசிரியர், அரசுப்பள்ளி, திருப்புட்குழி, காஞ்சிபுரம் தொடர்புக்கு: udhayalakshmir@gmail.com
கட்டுரையாளர்: குழந்தை நேய செயற்பாட்டாளர், ஆசிரியர், அரசுப்பள்ளி, திருப்புட்குழி, காஞ்சிபுரம் தொடர்புக்கு: udhayalakshmir@gmail.com
Updated on
2 min read

கல்வியாளரான பேராசிரியர் ச.மாடசாமியின் 'வித்தியாசம்தான் அழகு' என்ற நூல் குழந்தைகளுக்கான கதைகளையும்,பெரியவர்களுக்கான நீதியையும் கொண்டுள்ளது. இந்நூலை அகரம் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இந்நூலில் 20 கதைகள் இடம்பெற் றுள்ளன. இவை, நம் குழந்தைகள் வளரும்போது கொண்டிருக்க வேண்டும் என நாம் விரும்பும் விழுமியங்களை, கதை கேட்ட அளவில் பின்பற்றும் விதத்தில் சொல்லப்பட்டுள்ள வெளிநாட்டுக் கதைகள்.

மகிழ்ச்சியான சிங்கம்: ‘The Happy lion' என்ற கதையில் கூண்டுக்குள் இருக்கும் சிங்கம், பாதுகாவலரின் கவனக்குறைவால் கதவு அடைக்கப்படாத கூண்டிலிருந்து ஒருநாள்வெளியே வருகிறது. தினமும் நம்மைப்பார்த்து ‘ஹாய்’ சொல்ல வரும் நண்பர்களுக்கு, இன்று நாம் ‘ஹாய்’ சொல்லி வரலாம் என்று சிங்கம் கிளம்புகிறது.

ஆனால், சுதந்திரமாய் உள்ள சிங்கத்தைக் கண்டு அஞ்சி ஓடுகின்றனர் அனைவரும். சிங்கத்திற்கு ஆச்சரியம். ஏன் என புரியாமல் விழிக்கிறது. ஒரே ஒரு சிறுவன் ஃபிராங்காய்ஸ் மட்டும் எப்போதும்போல ‘ஹாய்’ சொல்லும் சிங்கத்திற்கு ஹாய் சொல்லுகிறான். வா பூங்காவுக்கு போக லாம் என்கிறான். சிங்கம் மகிழ்ச்சியாக கூண்டுக்குத் திரும்புகிறது.

Happy lion மூலம் நமக்கு ஏற்படும் கேள்வி, ஒருநாள் முழுவதும் குழந்தைகள் நம் பேச்சு கேட்டு சொன்னபடி நடந்துகொண்டால், அக்குழந்தைகளை கொஞ்சுகிறோம். என்றாவது குழந்தைகள் மறுத்தால், பிரியம் காட்ட யோசிக்கிறோம். கட்டுப்படுத்தி பாதுகாப்பான தூரத்தில் வைத்துவிட்டு ஹலோ சொல்லவும், திண்பண்டங்களை வீசவும், பிரியத்தைக் காட்டவும் குழந்தைகள் கூட விலங்குகள் தானா? என்பதுதான் வீடுகளையும், வகுப்பறைகளையும் நோக்கி வீசப்படும் கேள்வி என்கிறார் ஆசிரியர்.

எது சாதூர்யம்? - எச்சரிக்கையாக இருப்பதா? நண்பர் களாக இருப்பதா? வீட்டுக்கு விளையாட வரும் நண்பர்களுடன் தங்கள் குழந்தை யின் நடத்தையை ஒப்பிட்டு, பாரு அவள் எவ்ளோ சாமார்த்தியமா இருக்கிறாள்? நீ ஏமாந்து போகிறாயே? என்று புலம்பும் அம்மாக்கள் உண்டு. இந்தக் கதை பெற்றோர்கள் வாசிக்க வேண்டிய கதை.தோழிகள் இருவரில் ஒரு தோழி மற்றொருத்தியை தன் சாதுர்யத்தால் ஏமாற்றுவதாக கதை. அது குழந்தையின் சாதுர்யம் அல்ல. குழந்தைக்குள் பெரியவர்கள் புகுந்தது என்கிறார் ஆசிரியர். இருவரும் விளையாட்டில் எச்சரிக்கையாக இருப் பதை விட,நண்பர்களாக இருப்பதே சிறந்தது என்ற முடிவுக்கு வருகிறனர்.

இந்தக் கதையில் வரும் இரண்டு வரிகள் பிரசித்தமானவை. அப்பாவி பிரான்சிஸ் தோழி பேசும் பேச்சு அது. Being careful is not nice. Being friends is better. குழந்தைகளின் நட்புக்கு மட்டுமல்ல. எல்லா உறவுகளுக்கும் பொருந்தக்கூடிய பேச்சு அது. தந்திரங் களால் சூழப்பட்ட உறவுகளில் உண்மை யான அன்பைத் தேடும் பேச்சு.

பரிவில் கவனம்: `தடுமாறும் குரல்களை கவனித்துக் கேளுங்கள்' கதையில், திக்குவாய் அணிலின் மூலம் சொல்லும் செய்தி, சிறு சிறு உடல் குறைபாடும் அளவற்ற ஆற்றலும் கொண்ட பலர், பாடப்படாத கதாநாயகர்களாக நம்மிடையே வாழ்வதை ஸ்டேன்லி அணில் உணர்த்துகிறது. சிறுசிறு பரிகாசங்கள்,கோபங்கள், வருத் தங்கள், இறுக்கங்கள், இவற்றைக் கடந் தால்தான் கசிகிற அன்பைக் காணமுடியும் என்கிறார்.

`பரிவும் பாதுகாப்பும்' கதையில் ஒருகாட்டில் தம்பதி எலிகள் பல் டாக்டராக இருந்து, விலங்குகளின் நோய்க்கு மருத்துவம் செய்கின்றன. ஆனால் ஆபத்தான விலங்குகளுக்கு வைத்தியம் செய்வதில்லை என போர்டும் மாட்டியுள்ளன. நரி ஒருமுறை மிகவும் கெஞ்சியதால், மருத்துவம் பார்க்கின்றன. ஆனால்நரியிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ளும் திட்டத்தையும் செயல்படுத்து கின்றன எலிகள்.

பல் சிகிச்சை முடிந்ததும், சொத்தைப் பல்லை பிடுங்கி, பல்கட்டிவிட்ட எலியையே சாப்பிட எண்ணம் கொண்ட நரியிடம், வாய் முழுவதும் கோந்து பசையால் ஒட்டி, வாயைத்திறக்காவண்ணம் செய்து, தங்களைப்பாதுகாத்துக் கொள்ளவும் செய்கின்றனமருத்துவத் தம்பதிகள். பரிவின் காரணமாகப் பாதுகாப்பைக் கோட்டைவிடக் கூடாது என்பதையும், சுயபாதுகாப்பையே நினைத்துக்கொண்டு பரிவு காட்டவேண்டிய தருணங்களைத் தவறவிடக் கூடாது என்பதையும் வேடிக்கையாகச் சொல்லும் கதையல்லவா இது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in