

ரயிலை விட்டு இறங்கி பிரதீப் சுற்றும் முற்றும் பார்த்தான். அங்கே நின்றிருந்த ரோபோ கைகுலுக்கியது. முன்னே செல்ல அவன் பின் தொடர்ந்தான். வீட்டை அடைந்தவுடன் எல்லோரும் உற்சாகமாக வரவேற்றார்கள். சுற்றும் முற்றும் உள்ளவர்கள் ரோபோவை ஆச்சரியத்துடன் பார்த்தனர். மாமா பிரதீப்பை பார்த்து இந்த ரோபோவை உனக்கு பரிசாக அளிக்கிறேன். உனக்கு உதவிகரமாக இருக்கும் என்றார். அன்று முதல் கடைக்கு போய் காய்கறி வாங்குவது, அலுவலக பணியில் உதவுவது என எல்லா வேலையும் வரிந்து கட்டி செய்தது. எங்கு சென்றாலும் ரோபோவிற்கு வரவேற்பு இருந் தது.
அன்று முழுவதும் குழந்தை லூலு ரோபோவையே நினைத்துக் கொண்டு இருந்தது. நாமும் ரோபோவை பயன்படுத்த வேண்டும் என்று அம்மாவிடம் கூறியது. உலகமே ரோபோவை வைத்து தான் இயங்கப் போகிறது என்ற விந்தை செய்தியை அம்மா சொன்னார். எனக்கும் ரோபோ வாங்கித் தாருங்கள். நானும் சாதனை படைக்கிறேன் என்று லூலு சொன்னது. ஆமாமா விண்வெளிக்கு அனுப்பப் போகிறாயா? என்று அம்மா கிண்டல் அடித்தார். அந்த நாளும் வந்துவிடும் நீங்கள் பெருமையாக கொண்டாடலாம் என்றது.
இதைத் தான் வள்ளுவர்
நம்மால் முடியுமா என்ற மன தளர்ச்சி இல்லாமல் முடியும் என்ற தன்னம்பிக்கையுடன் இருந்தால் அது வலிமையாக அமையும் என்கிறார்
அருமை உடைத்தென்று அசவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும். குறள்: 611
(அதிகாரம்: 61 ஆள்வினையுடைமை
- கட்டுரையாளர்: பள்ளி ஆசிரியர்