

ஆனந்தன் பணத்தை தொலைத்து விட்டதால் வீட்டிற்கு நடந்தே சென்றான். சாலை ஓரங்களில் உள்ள பசுமையான மரங்களைப் பார்த்து எண்ணிக் கொண்டே வந்தான். ஒரு மரத்தில் பூ பூத்து குலுங்கியது. அடுத்த அடுத்த மரங்கள் தோளில் சாய்ந்து தோழமை கொண்டாடியது. சில மரங்களில் காய்களும், சில மரங்களில் கனிகளும் இருப்பதை பார்த்து மகிழ்ந்தான். ஒரு மரம் மட்டும்வாடி இருப்பதைக் கண்டு வருத்தம் அடைந் தான்.
மறுநாள் முதல் தன் நண்பர்களுடன் இணைந்து மரத்திற்கு தண்ணீர் ஊற்றும் வழக்கத்தைக் கொண்டான். சிறிது காலத் திற்குப் பின் அந்த மரத்தில் பறவைகள் கூடுகட்டின. சிறுவர்கள் ஊஞ்சல் கட்டி விளையாடினார்கள். முதியவர்கள் நிழலில் படுத்து உறங்கினர். இந்த காட்சியைக் கண்ட ஆனந்தனுக்கு எல்லையில்லா ஆனந்தம். இவனுடைய செயலை ஊரார் பாராட்டினர். அவனுடைய தாய் கண்மணி இளமைக் கால நிகழ்வை மகனிடம் நினைவுகூர்ந்தாள். பாட்டியோடு கடைக்குச் செல்லும்போது வெயில் அதிகமாக இருந்த காரணத்தால் மயங்கி விழுந்துவிட்டார்கள். செய்வதறியாது திகைத்துவிட்டேன்.
பின்னர் உன்னைப் போல் ஒரு இளைஞன் தண்ணீர் கொடுத்து உதவினான். உன்னுடைய செயலால் பலரும் பயனடைவார்கள் என்று பாராட்டினாள். இதைக் கேட்டுக் கொண்டு இருந்த ஆதித்யா அம்மா, அம்மா நானும் மரம் நடுகிறேன் என்றான். உங்களுடைய ஊக்கமே சமூகத்திற்கு ஒரு ஆக்கம் என்று சொன்னார்கள். ஆனந்தனையும், ஆதித்யாவையும், அம்மா உச்சி முகர்ந்தாள்.
இதைத்தான் வள்ளுவர், பெருமை அதிகாரத்தில்
ஒளிஒருவற்கு உள்ள வெறுக்கை இளிஒருவற்கு
அஃதிறந்து வாழ்தும் எனல். (குறள்971)என்றார்.
- கட்டுரையாளர்: பள்ளி ஆசிரியர்