வேலைக்கு நான் தயார் - 18: மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் கல்வி கற்க விருப்பமா?

வேலைக்கு நான் தயார் - 18: மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் கல்வி கற்க விருப்பமா?
Updated on
1 min read

எங்கள் ஊரில் ஒருவர் செயற்கை கால்களுடன் நடந்து செல்வதை பார்த்தேன். இதுபோன்று செயற்கைக் கைகள், கால்கள் எப்படி பொருத்தமாக செய்கிறார்கள்? அதற்கென படிப்புகள் உண்டா? என்ன படிக்க வேண்டும்? நான் உறுப்புகளை இழந்தவர்களுக்கு உதவிட எண்ணுகிறேன். - ச்ஸ்மதி மன்னர்புரம், திருச்சி.

உங்கள் நல்லெண்ணம் பாராட்டத்தக்கது. இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி மூலம் செயற்கைக் கைகள், கால்கள் ஆகியவற்றை இலகுவாக பொருத்தி மீண்டும் அவர்கள் இயல்பான நிலையில் அனைத்து வேலைகளையும் செய்திட முடியும். இன்று செயற்கைக் கால்களுடன் மலையேற்றம் வெற்றிகரமாக முடித்தவர்களும் உள்ளனர். இதற்கென நீங்கள் B.P.O. எனப்படும் Bachelor of Prosthetics and Orthotics என்கிற நான்கு வருட பட்டப்படிப்பினை படிக்கவேண்டும். இந்த படிப்பை வழங்கும் கல்லூரிகள் சற்றே குறைவாக உள்ளன.

தமிழ்நாட்டில் 1.சி.எம்.சி. வேலூர், 2. ஈஷ்வர் இன்ஸ்டிடியூட் ஆஃப் புராஸ்தெடிக்ஸ் அண்ட் ஆரிதோடிக்ஸ், சென்னை, 3.நேஷனல் இன்ஸ்டிடியூட் ஃபார் எம்பவர்மெண்ட் ஆஃப் பர்சன்ஸ் வித் மல்டிப்பில் டிஸ்ஏபிலிட்டிஸ், கோவளம், சென்னை. இவை தவிர்த்து மற்ற மாநிலங்களில் சில முக்கிய கல்வி நிறுவனங்கள் இத்துறை சார்ந்து கற்பித்து வருகின்றன. 1. சுவாமி விவேகானந்தா நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ரீஹாபிலி டேஷன் டிரைனிங் ஆண்ட் ரிசர்ச், கட்டாக், ஒடிசா, 2. பண்டித் தீன்தயால் உபாத்தியாயா இன்ஸ்டிடியூட் ஃபார் பிசிகலி ஹான்டிகேப்ட், புதுடெல்லி, 3. ஏ.ஐ.ஐ.ப்பி.எம்.ஆர். (All India Institute of Physical Medicine and Rehabilitation (AIIPMR)) மும்பை, 4. நேஷனல் இன்ஸ்டிடியூட் ஃபார் ஆர்த்தோபிடிக்கலி ஹான்டிக்கப்ட் கொல்கத்தா, 5. டாக்டர் சகுந்தலா மிஸ்ரா நேஷனல் ரிஹாபிலிங்டேஷன், லக்னோ, 6. பகவான் மகாவீர் விகலாங் சகாயதா சமிதி, ஜெய்பூர். உங்களின் வசதிக்கேற்ப இந்தக் கல்வி நிறுவனங்களில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து படிக்கலாம்.

உயர்கல்வி, வேலைவாய்ப்பு தொடர்பான உங்களது சந்தேகங்களை ‘வேலைக்கு நான் தயார்’ பகுதிக்கு vetrikodi@hindutamil.co.in என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி நிபுணரின் வழிகாட்டுதல் பெறுங்கள்.

- கட்டுரையாளர்: வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை முன்னாள் இணை இயக்குநர்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in