வேலைக்கு நான் தயார் - 17: நான் கணினி அறிவியல் பாடம் எடுக்கவில்லை

வேலைக்கு நான் தயார் - 17: நான் கணினி அறிவியல் பாடம் எடுக்கவில்லை
Updated on
1 min read

நான் கணினி அறிவியல் பாடம் எடுக்கவில்லை. முதலாமாண்டு வரலாறு படிக்கிறேன். இருந்தாலும் கணினித் துறையில் நிறைய கற்றுக்கொள்ள விரும்புகிறேன். இலவசமாக கற்றுக் கொள்ள வழி வகை உள்ளதா என்று வழிகாட்டுங்கள்.

- முத்துமணி, ஆர்.எஸ். மங்களம்.

கணினி தொடர்பான பாடங்கள் மற்றும் பல்வேறு உட்பிரிவுகள் அடங்கிய பாடங்கள் சிறு சிறு தொகுதியாக ஆன்லைனில் இலவசமாகவும், சலுகை கட்டணத்திலும் வழங்கப்படுகிறது. இதனை MOOC (Massive Online Open Courses) வாயிலாக இந்தியாவின் ஐ.ஐ.டிக்கள் உட்பட உலகின் தலைசிறந்த உயர்கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள்வழங்குகின்றன.

அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப தெரிவு செய்து படிக்கலாம். நீங்கள் ஆரம்பக்கட்ட படிப்புகளை இலவசமாகப் படிக்கவும் வழிவகை உள்ளது. இதனை கூகுள் வழங்குகிறது. சில பாடங்களுக்குச் சான்றிதழ்களும் உண்டு.

அவற்றில் சில :

1. ஃபன்டமென்ட்டல்ஸ் ஆஃப்டிஜிட்டல் மார்கெட்டிங், 2. கூகுள்க்ளவுட் கம்ப்யுட்டிங் ஃபன்டமென்ட்டல்ஸ், 3. கூகுள் பைத்தன் கிளாஸ், 4. ஜாவா புரோகிராமிங், 5. டேட்டா சயின்ஸ் வித் பைத்தன், 6. க்ளவுட் எசன்ஷியல்ஸ் அறிமுகம், 7. மெஷின் லேர்னிங், 8. ஏஐ, டேட்டா, எம்.எல். அறிமுகம்.

இவை தவிரவும் சுமார் 150க்கும் மேற்பட்ட பாடங்களை கூகுள் ஆன்லைனில் அளிக்கிறது. அதுபோலவே கோர் சேரா (Coursera), என்ப்பிடெல் (NPTEL), ஐஐடி, எடெக்ஸ் (Edx), ஸ்வயம் (Swayam), யுடெமி (Udemy) ஆகியவை பிரபலமான மூக்ஸ் பிளாட்ஃபார்ம் ஆகும். இவற்றின் மூலம் கணினி அறிவியல் சார்ந்த அனைத்து வகையான பாடப்பிரிவுகளுடன் மைக்ரோசாப்ட், லினெக்ஸ் நெட்வொர்க்கிங் பயிற்சிகளையும் ஆன்லைன் வாயிலாக இலவசமாகப் பெறலாம்.

உயர்கல்வி, வேலைவாய்ப்பு தொடர்பான உங்களது சந்தேகங்களை ‘வேலைக்கு நான் தயார்’ பகுதிக்கு vetrikodi@hindutamil.co.in என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி நிபுணரின் வழிகாட்டுதல் பெறுங்கள்.

- கட்டுரையாளர்: வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை முன்னாள் இணை இயக்குநர்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in