

வெயிலின் கொடுமை தாங்காமல் பூமி பாளம் பாளமாய் வெடித்தது. எலும்பில்லாத மண் புழுக்கள் துடி துடித்து இறந்தன. இதைப் பார்த்த அபிஷேக் வருத்தம் அடைந்தான். அவனுடைய நண்பன் நித்தின் வீட்டிற்கு சென்றான் அவன் மரத்திற்கு மரம் குரங்காய் தாவி ஒவ்வொரு பறவையையும் அடித்து துன்புறுத்தி அழகு பார்த்தான். வயலில் மேய்ந்து கொண்டிருந்த ஆடு மாடுகள் மீது ஏறி சவாரி செய்தான்.
இதைத் தடுத்த நண்பனையும் அடித்து விரட்டினான். காட்டில் வாழும் சிங்கம், புலியைவிட கொடியவனாய் இருக்கிறாய் என்று திட்டிக் கொண்டே வீட்டிற்கு சென்றான். நித்தின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு துன்பத்தை அருகில் இருப்பவர்களுக்கு கொடுத்து கொண்டே இருந்தான். குழந்தைகள் இவனைக் கண்டாலே பயந்து ஒட்டம் பிடித்தனர். இதைப் பொறுக்காமல் ஊரார் அனைவரும் சாபம் விட்டார்கள். தினமும் சந்திக்கும் சாமியாரிடம் என்னை எல்லோரும் ஏன் சாபம் விடுகிறார்கள் என்று கேட்டான்?.
நீ யாரிடமும் அன்பு செலுத்தாமல் துன்புறுத்தி பார்ப்பதுதான் அவர்களுக்கு உன்னைப் பிடிக்கவில்லை என்றார். மனசுல ஈரம் இருந்தால் இந்த செயலை செய்யமாட்டாய். அன்பு தான் எந்த தீங்கும் செய்யாமல் தடுக்கும். இன்று முதல் நீ எல்லோரிடமும் அன்பு காட்டு. இல்லையென்றால் எலும்பு இல்லாத புழு வெயிலில் துடிப்பது போல் உன்னையும் அறக் கடவுள் தண்டிப்பார் என்று சொன்னார். தன் நண்பன் அபிஷேக்கை அடித்து விரட்டியது நினைவுக்கு வந்தது. அவன் வீட்டிற்கு சென்று மன்னிப்பு கேட்டான். அன்பு சுரந்தது. நட்பு வளர்ந்தது
இதைத் தான் வள்ளுவர்
என்பிலதனை வெயில் போல பாயும்
அன்பில் அதனை அறம். குறள்: 77
என்றார்
அதிகாரம்; அன்புடைமை
- கட்டுரையாளர்: பள்ளி ஆசிரியர்