

உலகின் நிலப் பரப்பில் மூன்றில் இரண்டு பங்கு தண்ணீர். ஆகவே இது கடல் சூழ் உலகு. எந்த நாட்டுல நீளமான கடற்கரை இருக்கோ, அந்த நாடு பொருளாதாரத்துல ஆதாயம் கொண்ட நாடுன்னு சொல்லலாம் ஏனா மீன் வளம் கிடைக்கும், துறைமுகம் இருக்கும், கப்பல் போக்குவரத்து மூலம் வருமானம் கிடைக்க வழி இருக்கு. இன்னொரு ஆதாயமும் இருக்கே… சுற்றுலாத் துறை!
ஆமாம் சார்… சுற்றுலாப் பயணிகள் வர்றதனால அன்னிய செலாவணியும் நிறைய கிடைக்கும். ஓ! அந்த அளவுக்குத் தெரியுமா… சரியாக சொன்னீங்க பிரியா. பொதுவா கடற்கரை இருக்குற நாடுகள்ல, கடல் ஒட்டிய பகுதிகள்ல, மக்கள் தொகை, ரொம்பவும் அடர்த்தியா இருக்கும்.
கடல் மட்டும் இல்லை ஆறு, ஏரி, குளம் இதை ஒட்டி மக்கள் அதிகம் வசிக்கிறாங்க இல்லையா சார்? ரொம்ப நல்லா கவனிச்சு இருக்கீங்க ரொம்ப சரியான கருத்து. சரி, இப்ப நாம ஐரோப்பிய கண்டத்தின் மிக நீளமான கடற்கரை பற்றிப் பார்க்கப் போறோம். இன்றைக்கு, உலக சமாதானம்னு சொன்னாலே சட்டுனு ஞாபகத்துக்கு வர்ற ஐரோப்பிய நாடு எது?
உலக அமைதின்னு சொன்னாலே இந்தியாதான் ஞாபகம் வரும். ஆனால், நான் ஐரோப்பிய நாடுன்னு சொன்னேனே. ‘நார்வே’ தான் அந்த நாடு. பல சமயங்கள்ல நடுநிலையோடு சமரசம் செய்து வைக்கிறதுல நார்வே நல்ல முயற்சி எடுத்துருக்கு. இருக்கட்டும். இப்ப நமக்கு வேண்டியது நார்வே கடற்கரை.
உலகத்துலயே இரண்டாவது மிக நீளமான கடற்கரை கொண்ட நாடு நார்வே. எல்லா நாடுகள்ல இருந்தும் பயணிகள் இங்கே வர்றாங்க. நார்வே கடற்கரை ஒட்டி அழகான இயற்கைக் காட்சிகள் நிரம்பிக் கிடக்கு. சின்ன சின்ன கப்பல்கள், படகுகள் மூலமா பயணிகளை அழைச்சிக்கிட்டுப் போய் காட்டறாங்க. பொதுவா நார்வே அமைதியான நாடுங்கறதனால ஆண்டு முழுதும், சுற்றுலாப் பயணிகள் வந்து குவியறாங்க.
‘ஸ்காகரக், ‘நார்த் சீ’ (வடக்குக் கடல்), நார்வேஜியன் கடல் ஆகியன நார்வே நாட்டைஒட்டிய கடல்கள். இந்தப் பகுதிகளில் சின்னஞ் சிறிய தீவுகள் ஏராளமாக இருக்கு. சுற்றிலா மட்டுமில்லாம பெட்ரோலியம், கடல் வணிகம், மீன் பண்னைகள் ஆகியனவும் இங்கு முக்கிய பொருளாதார நடவடிக்கைகளா இருந்து வருது.
இந்த வாரக் கேள்வி: கடற்கரை இருப்பது, ஒரு நாட்டின் தட்ப வெப்பநிலைக்கு சாதகமா? பாதகமா?
(பயணிப்போம்)
- கட்டுரையாளர், கல்வி, வேலைவாய்ப்பு போட்டித்தேர்வுக்கான வழிகாட்டி. தொடர்புக்கு: bbhaaskaran@gmail.com