

நான் பிளஸ் 2 படிக்கிறேன். எனக்கு கல்லூரி பட்டப்படிப்பில் பயோ டெக்னாலஜி படிக்க ஆசை. அதன் பிரிவுகள் எனென்ன? இதை படித்தால் வேலை கிடைக்குமா? போன்றவற்றை சொல்லுங்களேன். - செல்வகணேஷ், புத்தனாம்பட்டி துறையூர்.
பயோ டெக்னாலஜி படிப்பானது 4 வருட பி.டெக் பயோ டெக்னாலஜி, 3 வருட பி.எஸ்.சி. பயோ டெக்னாலஜி மற்றும் 5 வருட ஒருங்கிணைந்த எம்.எஸ்சி. பயோ டெக்னாலஜி படிப்பாக நாடு முழுவதும் வழங்கப்படுகிறது. முதலில் பயோ டெக்னாலஜியில் 4 வருட (பொறியியல்) படிப்பு அல்லது 3 வருட பட்டப்படிப்பாக முடிக்கவும். பின்னர் எம்.டெக் அல்லது எம்.எஸ்சி. பயோ டெக்னாலஜி படிக்கலாம்.
பயோ டெக்னாலஜியில் பின்வரும் சிறப்பு பிரிவுகளை படிக்கலாம். அக்ரி பயோ டெக்னாலஜி, வெட்டினரி பயோ டெக்னாலஜி, இன்டஸ்ட்ரியல் பயோ டெக்னாலஜி, பிளான்ட் பயோ டெக்னாலஜி, மரைன் பயோ டெக்னாலஜி, ஹியுமன் பயோ டெக்னாலஜி, என்விரான்மென்ட்டல் பயோ டெக்னாலஜி, அனிமல் பயோ டெக்னாலஜி ஆகியவையாகும்.
பயோ டெக்னாலஜி பட்டம் பெற்றவர்களுக்கு சமீபமாக நிறை பணி வாய்ப்புகள் வரத் தொடங்கியுள்ளது. இனி இந்த பட்டப்படிப்பில் சேரவிருப்பவர்களுக்கு அடுத்த சில ஆண்டுகளில் மருந்தியல், கால்நடை பராமரிப்பு, வேளாண்மை, சுகாதாரம், மரபணு பொறியியல் சார்ந்த துறைகளில் மேலும் பல புதிய வேலைவாய்ப்பு கிடைக்கப் பிரகாசமாக வாய்ப்பு உள்ளது. எதுவாக இருப்பினும் பயோ டெக்னாலஜி எங்கே படிக்கிறீர்கள் என்பதும் முக்கியம். ஆகையால் நீங்கள் தேர்ந்தெடுக்கும் கல்வி நிறுவனத்தின் மீது கவனம் தேவை.
உயர்கல்வி, வேலைவாய்ப்பு தொடர்பான உங்களது சந்தேகங்களை ‘வேலைக்கு நான் தயார்’ பகுதிக்கு vetrikodi@hindutamil.co.in என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி நிபுணரின் வழிகாட்டுதல் பெறுங்கள்.
- கட்டுரையாளர்: வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை முன்னாள் இணை இயக்குநர்.