

வேகம் என்ற வார்த்தையை தினசரி நாம் கேட்டுக்கொண்டே இருக்கிறோம். வேகத்திற்கான கணித சூத்திரம் வேகம் = தூரம் / நேரம். இதன் அலகு kmph அல்லது km/h. ஆனால் நாம் வெகு அரிதாகவே இந்த அலகினை பயன்படுத்துவோம். வேகம் என்ற சொல்லை நம் வீட்டிலேயே பயன்படுத்துவோம்.
அந்தரத்தில் சுழலும் மின்விசிறியில் வேகம் இருக்கின்றதா? மின்விசிறியின் வேகத்தை எப்படிச் சொல்வது? அது தூரத்தை கடக்கவே இல்லையே. வேகம் கணக்கிட தூரம் வேண்டும் மற்றும் நேரம் வேண்டும். ஒரே இடத்தில்தானே சுழல்கிறது. இதன் வேகத்தை ஒரு நிமிடத்திற்கு எத்தனை சுழற்றி என கணக்கிடுவார்கள்.
ஆங்கிலத்தில் Rotations Per Minute. Rpm. வேகமாக மின்விசிறி சுழல்வதால் நமக்கு வெறும் ஒரு சக்கரம் போல மட்டுமே இருக்கும், நம் கண்களால் அந்த வேகமான சுழற்றியைக் கிரகிக்க முடிவதில்லை. இதுவே மிக மிக மெதுவாகச் சில இடங்களில் மின்விசிறிகள் சுழலும். அங்கே எளிதாக ஒரு நிமிடத்திற்கு எத்தனை சுழற்றி என்று கண்டுபிடித்துவிடலாம்.
சுழற்றி அளவி: சுழற்றி அளவி – Tachometer – இந்தக் கருவியைப் பயன்படுத்தி மின்விசறியின் வேகத்தை கணக்கிடலாம். ஒரு ரேடியம் ஸ்டிக்கரை மின்விசிறியின் கீழ்ப்பகுதியில் ஒட்டிவிட்டால் எளிதாக இந்தக் கருவியைக் கொண்டு அதன் சுழற்றி வேகத்தைக் கண்டுபிடித்துவிடலாம். மின்விசிறியின் பின்புறம் இந்த rpm குறித்துக் குறிப்பிடப்பட்டு இருக்கும்.
தோராயமாக 200rpm - 400 rpm வரையில் மின்விசிறிகள் சுழலும். மின்விசிறியின் நீளத்திற்கு ஏற்பவும் மோட்டாரின் தன்மைக்கு ஏற்பவும் அது மாறுபடும். மேலும், அசுத்தமான இறக்கைகளாலும் மின்விசிறியின் வேகம் மட்டுப்படும். அறையின் உயரம், எவ்வளவு உயரத்தின் மின்விசிறி தொங்கவிடப்படுகிறது, எவ்வளவு பெரிய அறை, ஆகியவற்றைக் கொண்டே காற்று நன்றாக கிடைக்கிறதா இல்லையா என்று மாறுபடும்.
உத்திரத்தில் இருக்கும் மின்விசிறிகளைத் தவிர மேஜை மின்விசிறிகள், காற்றினை வெளியேற்றும் மின்விசிறிகள் என வீட்டிற்குள்ளே பலவகை மின்விசிறிகள் உள்ளன. அவை யின் வேகம் உத்திரத்தில் இருக்கும் மின்விசிறியைவிட அதிகம். சுமார் 1000 rpmவரையும் சுழலும். ஏனெனில் இதன் இறக்கை கள் இன்னும் சிறிதானவை. ஆகவே வேகம் கூடுதலாக இருக்கும்.
ஆனால், வாகனங்களுக்கு வேகத்தை குறிப்பிட kmph தானே குறிப்பிடுகின்றோம்? அதற்கும் rpm தேவையெனில் கண்டுபிடிக்கலாம். ஆனால் இங்கே சக்கரம் சுழற்று வேறு இடத்திற்கு நகர்ந்து இருக்கும். சைக்கிளின் வேகம் 10 Kmph என வைத்துக்கொள்வோம்.
இதனை முதலில் ஒரு நிமிடத்திற்கு எவ்வளவு தூரம் என கணக்கிட வேண்டும். 10/60 Km per minute = (10 X 1000) / 60 meters perminute = 166.66 meters per minute. அடுத்துசைக்கிள் சக்கரத்தின் சுற்றளவை கண்டுபிடிக்க வேண்டும். சைக்கிள் சக்கரத்தின் ஆரம் தெரிந்தால் சுற்றளவினை கண்டுபிடித்துவிடலாம். ஒரு சுற்றுக்கு ஒரு சுற்றளவு, ஆகவே, 166.67 / சுற்றளவு = சைக்கிளின் சுழற்சி வேகம் (rpm).
இன்னொரு இடத்திலும் இதே போல சுழல்வதை நாம் தினமும் பார்ப்போம். ஆனால் அங்கே இவ்வளவு வேகம் இல்லை. அண்ணன் தம்பி மூனு பேரு சுற்றிக்கொண்டே இருப்பாங்க. அதேதான். கடிகாரத்திலும் முட்கள் சுழல்கின்றன அல்லவா? விநாடி முள், நிமிட முள் மற்றும் மணி முள். விநாடி முள் எப்படிச் சுழல்கின்றது? ஒரு நிமிடத்திற்கு ஒரு சுழற்றி.
1 rpm என வைத்துக்கொள்வோம். நிமிட முள்? ஒரு மணி நேரத்திற்கு ஒரு சுழற்றி = 60 நிமிடங்களுக்கு ஒரு சுழற்சி = 1/60 rpm. மணி முள் ? ஒரு நாளுக்கு இரண்டு முறை சுழற்றி. அப்படியெனில் 24/2 = 12 மணி நேரத்திற்கு ஒரு சுழற்றி.
இதன் வேகம் அப்படியெனில் 1 / (12 X 60) = 1/720 rpm. ஆமா பூமி சுற்றுதுன்னு சொல்றாங்களே அதையும் rpm ல சொல்ல இயலுமா?
2 X 2 X 3 X 5 = 60.
இதே கணக்கில் நீங்க 3 அல்லது2 நபர்களுக்குக் பிரிக்கவேண்டும் என மாற்றி னாலும் விடை 60. அதாவது 1,2,3,4,5,6 எண்களுக்கான மீச்சிறு பொது மடங்கு 60.
- கட்டுரையாளர்: சிறார் எழுத்தாளர், ‘மலைப்பூ’, ‘1650 முன்ன ஒரு காலத்திலே’ உள்ளிட்டவை இவரது நூல்கள். தொடர்பு: umanaths@gmail.com