வேலைக்கு நான் தயார்: 12 - ‘ராயல்’ காமர்ஸில் இத்தனை பிரிவுகளா?

வேலைக்கு நான் தயார்: 12 - ‘ராயல்’ காமர்ஸில் இத்தனை பிரிவுகளா?
Updated on
1 min read

எனது மகன் பிளஸ் 1-ல் காமர்ஸ் அக்கவுன்டன்சி குரூப்-ஐ தேர்வு செய்து படித்து வருகிறான். அவனை பி.காம் படிக்க வைக்க ஆசைப்படுகிறேன். காமர்ஸில் என்னென்ன பிரிவுகள் உள்ளன. அவற்றில் எது சிறந்தது?

- கொளஞ்சியப்பன், விருதாச்சலம்.

இளநிலை வணகவியல் பட்டப்படிப்பான பி.காம்மிற்கு எப்போதுமே மவுசு உண்டு. ‘ராயல் காமர்ஸ்’ என்ற பெருமை கொள்ளும் மாணவர்களை அந்த காலம் முதல் இன்றுவரை பார்க்கிறோம். அந்த அளவுக்கு இந்த படிப்பை மேற்கொள்பவர்களுக்கு பிரகாசமான வேலைவாய்ப்பு உள்ளது. பி.காம். படிப்பானது பல சிறப்பு பாடப் பிரிவுகளுடன் அரசு கல்லூரிகள், தனியார் கல்லூரிகள் மற்றும் நிகர் நிலைப் பல்கலைக்கழங்களில் வழங்கப்படுகிறது. அவற்றை குறித்து நீங்கள் தெரிந்து கொண்டால் உங்கள் மகனின் விருப்பத்துக்கு ஏற்ப தேர்ந்தெடுத்து படிக்கலாம்.

1. பி.காம் (ஹானர்ஸ்)

2. பி.காம் (பேங்க் மேனேஜ்மெண்ட்)

3. பி.காம் (இன்சூரன்ஸ் மேனேஜ்மெண்ட்)

4. பி.காம் (பைனான்ஸ் அக்கவுன்டிங்)

5. பி.காம் (கோஆப்ரேசன்)

6. பி.காம் (கம்ப்யுட்டர் அப்ளிக்கேசன்)

7. பி.காம் (இவண்ட் மேனேஜ்மெண்ட்)

8. பி.காம் (கார்போரேட் செக்ரேட்ரிசிப்)

9. பி.காம் (புரோபஷனல் அக்கவுன்டிங்)

10. பி.காம் (ஜெனரல்)

11. பி.காம் (இன்பார்மேச்ன சஸ்டம் அண்ட மேனேஜ்மெண்ட்)

12. பி.காம் (இ. காமர்ஸ்)

13. பி.காம் (பார்ரின் டிரேட் மேனேஜ்மெண்ட்)

14. பி.காம் (டிராவல் அண்ட டூரிசம்)

15. பி.காம் (பிசினஸ் எக்னாமிக்ஸ்)

16. பி.காம் (டேக்ஸ் புராசசிங்)

17. பி.காம் (ட்டாக்சேசன்)

18. பி.காம் (கேப்பிடல் மார்கட்)

19. பி.காம் (மார்க்கெட்டிங்)

20. பி.காம் (இன்டர் நேஷனல் பிசினஸ்)

21. பி.காம் (சப்ளை செயின் மேனேஜ்மெண்ட்)

22. பி.காம் (இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி)

23. பி.காம் (புள்ளியியல்)

இவை தவிரவும் மேலும் சில சிறப்புப் பிரிவுகள் உள்ளன. இவை நாடு முழுவதும் உள்ள கலை அறிவியல் கல்லூரிகள், நிகர் நிலைப் பல்கலைக்கழகங்களில் வழங்கப்படுகின்றன.

உயர்கல்வி, வேலைவாய்ப்பு தொடர்பான உங்களது சந்தேகங்களை ‘வேலைக்கு நான் தயார்’ பகுதிக்கு vetrikodi@hindutamil.co.in என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி நிபுணரின் வழிகாட்டுதல் பெறுங்கள்.

- கட்டுரையாளர்: வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை முன்னாள் இணை இயக்குநர்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in