கனியும் கணிதம் 33: ரயில்வே பயணச்சீட்டும் கணிதமும்

கனியும் கணிதம் 33: ரயில்வே பயணச்சீட்டும் கணிதமும்
Updated on
2 min read

ரயில்வே பயணச்சீட்டை பார்த்துள்ளீர்களா? இப்போது ஆன்லைனில் பெரும்பாலும் பதிவு செய்யப்படுவதால் குறுந்தகவல் மட்டுமே வருகின்றன. நேரில் சென்று பதிவு செய்தால் பயணச்சீட்டு தருவார்கள். அதைத்தான் நீங்கள் பயணம் செய்யும்போது காட்ட வேண்டும். அதில் என்னென்ன இருக்கிறது என்று பார்ப்போம்.

இதுவே ஒவ்வொரு பயணச்சீட்டிலும் தனித்துவமான எண். இந்த எண்ணைக்கொடுத்தாலே யார் யார் பயணிக்கின்றார்கள், இருக்கை உறுதியாகிவிட்டதா? எந்த தேதியில் பயணம், எந்தக் கோச்சில் எந்தப் படுக்கை ஒதுக்கப்பட்டு இருக்கு, எங்கிருந்து எங்கே பயணம் என்ற அனைத்துத் தகவல்களையும் எடுத்துவிடலாம். PNR – Passenger Name Record. இது இந்தியாவில் பத்து இலக்க எண்ணாக இருக்கிறது. அப்படி எனில் எது அதிகபட்ச எண்? 9999999999. இவ்வளவு பதிவுகள் நடந்த பின்னர் மீண்டும் முதலில் இருந்து தொடங்குவார்கள்.

ஒவ்வொரு பயணச்சீட்டிலும் ரயில் எண்ணும் இருக்கும். இது ஒரு ஆறு இலக்க எண். ஐந்து இலக்க எண் எனில் அதிகபட்சம் 99,999. அதாவது ஒரு லட்சம் ரயில் எண்கள் இருக்கலாம். இந்தியாவில் சுமார் 23,000 ரயில் ஓடுகின்றன. பயணிகளை ஏற்றிச்செல்லும் ரயில்களின் எண்ணிக்கை இது. பயண தேதியில் எந்த நேரம் எந்த ரயில் நிறுத்தத்தில் ஏறலாம் என்ற விவரம் இருக்கும். இதில் நேரம் முக்கியமானது.

ரயில் நேரம் என்றும் ஒன்று பயன்பாட்டில் உள்ளது. வழக்கமாக நேரத்தைக் குறிப்பிடும்போது AM, PM எனக் குறிப்பிடுவோம் அல்லவா? மாலை 6.00 மணி என்பதை 6.00 PM என வழக்கமாகக் குறிப்பிடுவோம். ரயில் பயணச்சீட்டில் அது 18.00 என்று குறிப்பிட்டு இருக்கும். காலை 6.15 ரயில் எனில் வெறும் 6.15 எனக் குறிப்பிட்டு இருக்கும். இரவு 10 மணிக்கு ரயில் எனில் 12 10.00 = 22.00 மணி எனக் குறிப்பிடப்படும்.

பயண தூரம்: எவ்வளவு தூரம் என்பதைக் கிலோமீட்டர் அலகில் குறிப்பிட்டு இருப்பார்கள். இந்த பயணச்சீட்டில் எங்கே இருக்கிறது என பாருங்கள். 391 என இருக்கின்றதா அதுவே பயண தூரம். இதன் அடிப்படையில்தான் கட்டணம் நிர்ணயிக்கப்படும். இதிலேயே என்ன வகை என்றும் இருக்கும் Sleeper Coach, AC Coach (2Tier, 3 Tier, 3 Tier), முதல் வகுப்பு என வகுப்பிற்கு ஏற்றவாறு கட்டணம் நிர்ணயிக்கப்படும். எந்த கோச், என்ன இருக்கை எண், (LB – Lower Berth, UB – Upper Berth, MB -Middle Berth, SL – Side Lower, SU – Side Upper) என்பதும் இருக்கும்.

ஒரு இருக்கை பகுதியில் மொத்தம் 8 படுக்கைகள் இருக்கும். (படத்தில் காண்க) நம் ஊர் ரயில் பெட்டி அளவிற்கு மொத்தம் 8 பகுதிகள் இருக்கும். ஆக மொத்தம் 8 X 8 = 64 படுக்கைகள் இருக்கும். இதே அளவில் தான் இரண்டு அடுக்கு பெட்டியும்( 2 Tier Coach) இருக்கும். மூன்று படுக்கைகளுக்குப் பதில் இரண்டு படுக்கைகள் மட்டுமே இருக்கும். இரண்டு அடுக்குகளில் கூடுதல் இடம் என்பதால் கூடுதல் விலை.

பயணச்சீட்டில் , கூடுதலாகக் கிளம்பும் நேரம் மற்றும் சேரும் நேரமும் இருக்கும். தூரமும் இருக்கு நேரமும் இருக்கு அதனை வைத்து வேகத்தைக் கணக்கிட முடியுமா என்றால் துல்லியமாக கணக்கிட முடியாது. ஏனெனில் வழியில் ஏராளமான நிறுத்தங்கள் இருக்கும், சில சந்திப்புகளில் ரயில் நீண்ட நேரமும் நிற்கும். ஆனால் தோராயமான வேகத்தில் நீங்களே கணக்கிடலாம். இணைக்கப்பட்டிருக்கும் பயணச்சீட்டில் பயணித்தால் எவ்வளவு வேகத் தில் போகலாம்?

பயண நேரம்: 5 மணி நேரம் 40 நிமிடங்கள்

பயண தூரம்: 391 கிமீ.

வேகம் = தூரம் / நேரம். செய்வோமா?

- கட்டுரையாளர்: சிறார் எழுத்தாளர், ‘மலைப்பூ’, ‘1650 முன்ன ஒரு காலத்திலே’ உள்ளிட்டவை இவரது நூல்கள். தொடர்பு: umanaths@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in