

பூஜாவும் சஞ்சனாவும் கோயிலுக்கு சென்று வரும்போது நீ நாளை என்னோடு வந்தால் உனக்கு ஒரு அதிசயம் காட்டுகிறேன் என்றாள் சஞ்சனா. மறுநாள் இருவரும் வகுப்பறைக்குள் நுழைகிறார்கள். நுழைந்ததும் சாக்லேட் மழை கொட்டோ கொட்டென்று கொட்டியது.
பூஜாவின் மகிழ்ச்சிக்கோ எல்லை இல்லை. வீட்டிற்கு எடுத்து சென்று பத்திரப்படுத்தி வைத்தாள். மறுநாள் வகுப்பறையில் ஆசிரியர் பூஜாவின் குழுவிற்கு சாக்லேட் பொம்மை செய்து வர சொன்னார்கள். ஆசை ஆசையாய் சாக்லேட் காகிதத்துடன், பஞ்சு, மயில் இறகு, இவற்றை எல்லாம் சேர்த்து அளவுக்கு அதிகமாக வைத்ததால் சாக்லேட் பை அறுந்து விழுந்தது.
விளையாடிக் கொண்டு இருந்த பூஜாவின் தங்கை சாக்லேட் காகிதத்தை கிழித்துப் போட்டாள். பூஜாவுக்கோ அழுகை அழுகையாய் வந்தது. அம்மா அவளை சமாதானம் செய்து பள்ளிக்கு அனுப்பி வைத்தாள். அன்று முழுவதும் சோகமாக இருந்தாள். இதை கவனித்துக் கொண்டு இருந்த ஆசிரியர் பூஜாவை அருகே அழைத்து கேட்டார். நடந்தவற்றை கூறினாள்.
எப்படி மயில் இறகே ஆனாலும் அளவுக்கதிகமாக ஏற்றினால் வண்டி அச்சு முறியும். அதுபோல் சாக்லேட், பஞ்சு எல்லாம் லேசாக இருந்தாலும் அளவுக்கு அதிகமாக வைக்கும் போது அறுபட்டுவிடும் என்று புரிய வைத்தார். இதை தான் வள்ளுவர்
பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின். குறள்: 475
என்றார்.
அதிகாரம்; வலியறிதல்
- கட்டுரையாளர்: பள்ளி ஆசிரியர்