டிங்குவிடம் கேளுங்கள்: புறப்பட்ட இடத்துக்கே எப்படி புறா வருகிறது?

டிங்குவிடம் கேளுங்கள்: புறப்பட்ட இடத்துக்கே எப்படி புறா வருகிறது?
Updated on
1 min read

புறா எப்படித் தகவலைக் கொடுத்து விட்டு, மீண்டும் புறப்பட்ட இடத்துக்கே சரியாக வந்து சேர்கிறது, டிங்கு?

- என். மலர்விழி, 9-ம் வகுப்பு, அரசு மேல்நிலைப் பள்ளி, பாளையங்கோட்டை.

Homing Pigeon என்று அழைக்கப் படும் புறாக்களைத்தாம் மனிதர்கள் வளர்க்கிறார்கள். இந்தப் புறாக்களுக்குப் பயிற்சி கொடுத்து, செய்தி அனுப்புவதற்கும், உலகப் போர்கள், பந்தயங்கள் போன்ற வற்றிலும் பயன்படுத்தினர். அறிமுகம் இல்லாத ஓர் இடத்திலிருந்து தான் வசிக்கும் இடத்துக்கு மிகச் சரியாக இந்தப் புறாக்கள் வந்து சேர்ந்துவிடுகின்றன. இதற்குப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.

புறா தான் செல்லும் வழியை வரைபடமாக உணர்ந்து கொள்கிறது. திசைகாட்டி உணர்வும் இருக்கிறது. தலையில் உள்ள காந்தத்திசுக்களை வைத்து, பூமியின் காந்தப்புலத்தை உணர்ந்து வழியைக் கண்டுகொள்கிறது. ஒளியை வைத்துச் செல்கிறது. அகவொலி வரைபடம் மூலம் வழியைக் கண்டுபிடிக்கிறது.

இந்தக் காரணத்தால்தான் சரியான இடத்துக்குத் திரும்பி வருகிறது என்று உறுதியாக இதுவரை சொல்ல முடியவில்லை. இதுபற்றி இன்றும் பல்வேறு ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. எதிர்காலத்தில் சரியான காரணத்தைக் கண்டுபிடித்துவிடுவார்கள் என்று நம்புவோம், மலர்விழி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in