வேலைக்கு நான் தயார் - 9: அலங்காரத்தில் ஆதிக்கம் செலுத்தும் ப்ளைவுட்

வேலைக்கு நான் தயார் - 9: அலங்காரத்தில் ஆதிக்கம் செலுத்தும் ப்ளைவுட்
Updated on
1 min read

எங்கள் குடும்பத்தில் மூன்று தலைமுறையாக மரத்தொட்டி வைத்துள்ளோம். எனது மகன் இப்போது பிளஸ் 2 படித்து வருகிறான். ப்ளைவுட் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கலாம் என்று திட்டமிட்டுள்ளேன். அது தொடர்பான படிப்பு ஏதேனும் உள்ளதா என்று அலோசனை கூறுங்களேன்.

- எஸ்.ராஜகுமார், சிங்காநல்லூர், கோவை.

இன்றைய நாகரிக உலகில் ப்ளைவுட்டின் பயன்பாடு மிக அதிக அளவில் உள்ளது. வீட்டு கதவுகள் முதல் மேஜை நாற்காலி மற்றும் வீடு, அலுவலகம் ஆகிவற்றின் உட்புறங்களை அலங்காரப்படுத்துவதுவரை அனைத்து வகையிலும் ப்ளைவுட்டின் ஆதிக்கம் அதிகம். ப்ளைவுட் தொடர்பாக படிக்க பிரத்தியேக கல்வி நிறுவனமே உள்ளது.

IPIRT எனப்படும் இந்தியன் ப்ளைவுட் இண்டஸ்ட்ரீஸ் அண்டு ரிசர்ச் இன்ஸ்டிடியூட் (Indian Plywood Industries & Research Institute) பெங்களூரில் முதுநிலை டிப்ளமோ இன் வுட் அண்ட பேனல் புராடக்ட்ஸ் டெக்னாலஜி என்ற 1 வருட பட்டயபடிப்பு வழங்குகிறது. இதில் இணைய அறிவியல் அல்லது பொறியியலில் பட்டப் படிப்பினை முடித்திருக்க வேண்டும்.

இந்நிறுவனத்தில் 1989-ம் ஆண்டு முதல் ஒரு வருட பி.ஜி. டிப்ளாமா படிப்பு வழங்கப்படுகிறது. வருடந்தோறும் 30 நபர்களுக்கான சேர்க்கை நடைபெறுகிறது. இதனைத் தவிரவும் ஏற்கெனவே ப்ளைவுட் தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்களுக்கு குறுகிய கால திறன் பயிற்சிகளும் வழங்கப்படுகிறது.

உயர்கல்வி, வேலைவாய்ப்பு தொடர்பான உங்களது சந்தேகங்களை ‘வேலைக்கு நான் தயார்’ பகுதிக்கு vetrikodi@hindutamil.co.in என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி நிபுணரின் வழிகாட்டுதல் பெறுங்கள்.

- கட்டுரையாளர்: வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை முன்னாள் இணை இயக்குநர்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in