கதை கேளு கதை கேளு 38: ரஃப் நோட்டு

கட்டுரையாளர்: குழந்தை நேய செயற்பாட்டாளர், ஆசிரியர், அரசுப்பள்ளி, திருப்புட்குழி, காஞ்சிபுரம் தொடர்புக்கு: udhayalakshmir@gmail.com
கட்டுரையாளர்: குழந்தை நேய செயற்பாட்டாளர், ஆசிரியர், அரசுப்பள்ளி, திருப்புட்குழி, காஞ்சிபுரம் தொடர்புக்கு: udhayalakshmir@gmail.com
Updated on
2 min read

ஒரு பள்ளியில் பாபு என்ற மாணவன் இருக்கிறான். அந்த வகுப்பில் உள்ள மாணவர்களின் ரஃப் நோட்டுகள் மட்டும் காணாமல் போகின்றன. பாபுவின் ரஃப் நோட்டும் ஒருநாள் காணாமல் போகிறது. பாபுவுக்கு ஆச்சரியமாக இருக்கிறது. நன்றாகப் படிக்கும் மாணவர்களின் நோட்டுகள் காணாமல் போகலாம். தன்னைப் போன்றவனின் நோட்டும் காணாமல் போனது எப்படி? என்று யோசிக்கிறான்.

பள்ளிவிட்டு வீட்டுக்குள் நுழையும் பாபுவிடம் அவனுடைய தாய் உன்னுடைய மற்ற ரஃப் நோட்டுகளையெல்லாம் யாரோ ஒருவர் குதிரையில் பயணித்து வந்தவர் வாங்கிக் கொண்டு போனார் என்கிறார். பாபுவுக்கு தன் ரஃப் நோட்டில் என்னஎழுதியிருக்கிறோம் என்பது மறந்து விடுகிறது. ஆனால் அந்த நோட்டுகள் தனக்கு அவசியம் தேவை என்று நினைத்து நோட்டுகளைத் தேடி ஓடுகிறான்.

கதைசொல்லி பாபு: அவனை பாபுபாய் என்று அழைக்கும் ஒரே நண்பன் பிலீசிங். அவன்தான் பள்ளிக்கு குதிரையில் வருபவன். பாபு பிலீசிங்கிடம் செல்கிறான். அவன் குதிரை வைத்திருப்பது நான் ஒருவன் மட்டுமல்ல. கடற்கரையில் வேறு ஒருவர் குதிரை வைத்துக்கொண்டு இருக்கிறார். அவரிடம் சென்று விசாரிக்கலாம் என்று பாபுவை அழைத்துச் செல்கிறான். அங்கே பிலீசிங் போலவே ஒருவன் இருக்கிறான். அவன் பெயர் பாபர்சிங். பிலீசிங் கின் உடன்பிறந்த சகோதரன். ஆனால் பாபர்சிங்கும் மறுக்கிறான். நான் உன் வீட்டிற்கு வந்து உன் ரஃப் நோட்டுகளை எடுத்துச் செல்லவில்லை என்கிறான்.

கதையில் சுவாரசியம்: பாபுவிடம் ரஃப் நோட்டில் என்ன உள்ளது,அதை ஏன் தேடுகிறாய் என்று பாபர்சிங்கும் கேட்கிறான். எனக்கு நினைவில் இல்லையே என்கிறான் பாபு. அவன் ஒரு கதைசொல்லியாகி அழகான கதை ஒன்றைக் கூறுகிறான். கதையின் நடுவில் நிறுத்த முடியாத அளவுக்கு கதையின் சுவாரசியம் கூடிக்கொண்டே போகிறது. இன்றும் அவனால் கதை சொல்வதை நிறுத்தவே முடியவில்லை. பாபர்சிங் பாபுவிடம் வந்து சொன்னான்.

கதை சொல்லி முடித்ததும் உன் நாக்கை பல் இடுக்குகளில் வைத்துக்கொள். அப்போது சிறிது நேரம் பேச்சை நிறுத்திக்கொள்ளலாம் என்று பாபு செய்து பார்க்கிறான். அவனால் பேசாமல் இருக்கமுடிந்தது. இந்த முறை முன்பே தெரிந்திருந்தால் தன் பெற்றோரை அவமானப்படாமல் பாதுகாத்திருக்கலாமே என்று பாபு நினைக்கிறான். பிறகு மீண்டும் பிலீசிங் கிடம் தன் ரஃப் நோட்டு எங்கே, யார்தான் குதிரையில் வந்து வாங்கிச் சென்றிருப்பார்கள் என்று புலம்புகிறான்.

மனநல சிகிச்சை: கடற்கரையில் பாபுவின் கதையைக் கேட்டு பெருங்கூட்டம் கூடுகிறது. பாபர்சிங் ஒலிப்பெருக்கியயை கொண்டுவருகிறான். தன் குரலைத் தானே ஒலிப்பெருக்கியில் கேட்டு மகிழ்கிறான் பாபு.மகிழ்ச்சி துள்ளலில் நிறையக் கதைகளைக் கூறுகிறான். கதையைக் கேட்க பாபுவின் தலைமையாசிரியர் வருகிறார். பாபுவின் கதை சொல்லும் திறமையைக் கண்டு ஆச்சரியப்படுகிறார்.

தன் பெற்றோர் தன் கதைசொல்லலைக் கேட்டால் நன்றாக இருக்குமே என்று பாபு மனதில் நினைக்கிறான். ஒரு கதையின் முடிவு கேட்டு அனைவருமே பாபுவைக் கொண்டாடுகிறார்கள். அப்போது ஒரு ஓரத்தில் பாபுவின் தாயும் இருப்பதை பாபு பார்க்கிறான். மகிழ்ச்சியடைகிறான்.

மீண்டும் தொடர்ந்து கதைகளைக் கூறிக் கொண்டே இருக்கிறான். பாபுவுக்கு திடீரென்று தன் ரஃப் நோட்டில் என்ன உள்ளது? ஏன் அதைத் தேடுகிறாய்? என்ற பிலீசிங்கின் கேள்விக்கு பதில் நினைவு வருகிறது. ரஃப் நோட்டு முழுவதும் கதைகள்தான் உள்ளன என்கிறான்.பாபுவின் அருகில் வரும் பாபுவின் மனநலமருத்துவர் ,உனக்கு நினைவுகள் முற்றிலும்மறக்கிறதா? மறந்தது மீண்டும் நினைவுக்கு வருகிறதா என்று தெரிந்துகொள்ளவே உன் ரஃப் நோட்டுகளை ஒளித்துவைத்தோம். உனக்கு நினைவாற்றலில் குறைவில்லை. விரைவில் சரியாகி விடும் என்கிறார்.

தன்னம்பிக்கை: உலகத்தில் பிறக்கும் எல்லா குழந்தைகளும் குறைவில்லாதவர்களே. பாராட்டும், அங்கீகாரமும் கிடைக்கும்போது அவர்கள்தன்னம்பிக்கை உணர்வு பெறுகிறார்கள். அதனால் தன்னை புதுப்பித்துக் கொள்கிறார்கள். பாபுவை அதுவரை கையாண்ட விதத்தால் பல்பு எனக் கூப்பிட்டதால் மனதால் தன்னை தாழ்த்திக் கொண்டான் பாபு. பாபுவின் கதைசொல்லும் திறனால்பிறர் கொடுத்த பாராட்டு பாபுவை தன்னைஉயர்வாக மதிக்க வைத்திருக்கிறது.

குழந்தைகளுக்கு ஆசிரியர்கள், பெற்றோர்கள் தர வேண்டிய அங்கீகாரத்தை "ரஃப் நோட்டு" புத்தகம்மூலம் தன்னுடைய ஸ்டைலில் அழகாக இனிமையாக வலியுறுத் துகிறார் ஆயிஷா நடராஜன்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in