

உலகத்துல இருக்கிற தீவு நாடுகளைப் பார்த்துக்கிட்டு வர்றோம். இந்த வரிசையில மிக முக்கியமான நாடு இது. எதுவா இருக்கும்? இலங்கை…மாலத்தீவு...சரி… ஒரு குறிப்பு சொல்றேன்.
ஒரு குறிப்பு தர்றேன். ஒரே வார்தைதான். சட்டுனு சொல்லிடுவீங்க. அந்த ஒற்றைச் சொல் இதுதான். ‘உழைப்பு’. ‘ஜப்பான்’ ‘ஜப்பான்’ ‘ஜப்பான்’. ரொம்ப சரி. ஜப்பான். ஆனா அது ஒரு தீவு நாடுன்னு தெரியாது இல்லையா?
அமாம். அப்படி நாங்க யோசிச்சுப் பார்க்கலை. பரவாயில்லை. வடகிழக்கு பசிபிக் பெருங்கடலில், கிழக்கு ஆசியாவில் இருக்கிற தீவு நாடு ஜப்பான். கிழக்கு சீனா கடல், பிலிப்பைன்ஸ் கடல், ஜப்பான் கடல், ஓக்கோஸ் கடல் என்று ஜப்பானுக்கு அருகே சுற்றிலும் சமுத்திரங்கள் இருக்கின்றன.
நெருப்பு வளையம்! - ஜப்பான் பற்றி பேசும்போது நெருப்பு வளையம்னும் ஒரு அடையாளம் சொல்வாங்க. அது என்னனா, பசிபிக் பெருங்கடல் நாடுகள் சிலவற்றில் அவ்வப்போது திடீர் திடீர்னு எரிமலை வெடிக்கும். அதனால இந்த எரிமலை மண்டலத்தை ‘நெருப்பு வளையம்’ என்று சொல்வது உண்டு. சரியா..?
ஆமா… ஜப்பான் நாட்டின் தலை நகரம் எது..? ‘டோக்யோ..’ ‘டோக்கியோ..’ ஆமாம். ஒசாகா, கியோடோ, யொகஹமா, ஃபுகுகா, கோபே, நகோயா… இப்படி பெரிய நகரங்களும் நிறைய இருக்கு.
ஜப்பான் நாட்டுல முக்கால் வாசி நிலப் பரப்பு, மலைப் பாங்காக அமைந்து இருக்கு. கடலை ஒட்டிய பகுதிகள்ல மக்கள் தொகை ரொம்ப அடர்த்தியா இருக்கும். டோக்யோ பெரு மாநகரம்தான், உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட மாநகரம் இதுவே. இத்தோடு, நமக்கு நல்லா தெரியும் நீண்ட ஆயுளுடன் அதிக ஆண்டுகள் மக்கள் உயிர் வாழ்கிற நாடுன்னா அது ஜப்பான். அங்கே நூறு வயதுக்கு மேற்பட்டவர்களை பரவலாக சாதாரணமாகப் பார்க்கலாம்! அது எப்படி..? ‘கடின உழைப்பு’ ரொம்ப சரி. ஆரோக்கியமான வாழ்க்கை முறை. அத்தோடு, சலிப்பு இல்லாத கடின உழைப்பு. இதைக் கடைப்ப்பிடிச்சா நாமும் 100 வயதுக்கு மேல வாழலாம்.
(ஜப்பான் தொடரும்)
- கட்டுரையாளர், கல்வி, வேலைவாய்ப்பு போட்டித்தேர்வுக்கான வழிகாட்டி. தொடர்புக்கு: bbhaaskaran@gmail.com