

பாதை தவறி காட்டுக்கு அருகே வந்துவிட்டான் வளவன். அவன் கண்ட காட்சி மனதை உலுக்கியது. புலி ஒன்று அடிபட்டு உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தது. தாய் புலியைச் சுற்றி அதன் குட்டிகள் பணிவிடை செய்து கொண்டு இருந்தன. ஒரு குட்டி மருந்து போட்டது. ஒரு குட்டி உணவை ஊட்டி விட்டது. ஒரு குட்டி தன் தோளில் சாய்த்து தடவிக் கொடுத்து கொண்டு இருந்தது.
இதைப் பார்த்த வளவன் நாம் அம்மா அப்பா திட்டியதற்காக கோபம் கொண்டு வந்து விட்டோமே. விலங்குகளே தன் தாயை போட்டி போட்டு கவனிக்கும் போது நாமும் நம் கடமையை செய்ய வேண்டும் என்று ஊர் திருப்பினான். பெற்றோர் சொல்வதை கேட்டான். முழு நேரமும் படித்துக் கொண்டே இருந்தான். சிறிய, சிறிய ஆய்வில் ஈடுபட்டு வெற்றி பெற்றான். அனைவரும் பாராட்டினார்கள்.
இதை ஊக்கமாக கொண்டு சமூகத்திற்கு பயன்படும் வகையில் நாம் எதாவது செய்ய வேண்டும் என்று எண்ணி, வயதானவர்கள் நடக்காமல் சொகுசாக பயணம் செய்ய ஒரு வண்டியைக் கண்டுபிடித்தான். முதலில் தனது பாட்டியை அழைத்து உட்கார வைத்தான். பாட்டிக்கோ பேரன் கண்டுபிடிப்பில் பயணம் செய்வது விமானத்தில் பறப்பது போல் இருந்தது. ஊரே ஆரவாரம் செய்தது.
பெரியோரை மதிக்காத காலத்தில் வயதானவருக்கு என்று தனது கண்டுபிடிப்பை உலகத்திற்கு நிகழ்த்திக் காட்டியுள்ளான். மகனாக பெற்றெடுக்க இவன் தந்தை என்ன தவம் செய்தானோ என்று புகழாரம் சூட்டினர்
இதைத் தான் வள்ளுவர்
மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை என்நோற்றான்
கொல் எனும் சொல் (குறள்:70)
அதிகாரம்; மக்கட்பேறு.
- கட்டுரையாளர்: பள்ளி ஆசிரியர்