திறன் 365: களிமண் எடு! - எழுத்தை அழகாக்கு

எழுத்தாளர், தலைமையாசிரியர், டாக்டர் டி. திருஞானம் தொடக்கப் பள்ளி, மதுரை.
எழுத்தாளர், தலைமையாசிரியர், டாக்டர் டி. திருஞானம் தொடக்கப் பள்ளி, மதுரை.
Updated on
2 min read

குழந்தைகளின் கையெழுத்து அழகாக இல்லை. குழந்தைகள் ஒவ்வொரு நாளும் இரண்டு கோடு, நான்கு கோடு நோட்டில் எழுதி வருகின்றார்கள். ஆனால், கையெழுத்து கோழி கிறுக்கி வைத்தது போல் இருக்கிறது.

கரும்பலகையில் எழுதிப் போட்டு எழுதச் சொன்னால், இரண்டு மணி நேரம் எடுத்துக் கொள்கின்றனர். அவர்களுக்கு வேகமாக எழுத தெரியவில்லை. வேகமாக எழுதும் பலருக்கும், எழுத்து சீராகவும், அழகாகவும் இல்லை. இப்படி ஒவ்வொரு வகுப்பறையிலும் பலவிதமான மாணவர்கள் உள்ளார்கள். இவர்களுக்காக ஒரு செயல்பாடு உள்ளது.

ஒவ்வொரு குழந்தைகளையும் களிமண் கொண்டு வரச் சொல்லுங்கள். மைதானத்தில் வட்டமாக அமரச் செய்யுங்கள். மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஐந்து அல்லது ஆறு குழுக்களாகப் பிரிக்கவும். ஒவ்வொரு குழுவுக்கும் குறிப்பிட்ட வகையான பொருட்களைக் களிமண்உதவியுடன் செய்யக் கூறவும். உதாரணத்திற்கு சமையல் பொருட்கள், பொம்மைகள், சாலையில் செல்லும் வண்டிகள், ஆபரணங்கள், பாசி மணிகள்…

இந்தச் செயல்பாடுகளுடன் பாத்திரங்கள், குவளைகள், எண்ணெய் விளக்குகள் போன்ற மட்பாண்டங்கள் செய்தல் செயல்களை எட்டாம் வகுப்பு வரை உள்ள குழந்தைகளுக்கு கொடுக்கலாம். இது, அவர்களின் எழுத்தை மேம்படுத்துவதற்கும், குழந்தைகளின் கைகளை வலுப்படுத்தற்கும் கொடுக்கும் செயல்பாடு ஆகும்.

களிமண் பொருட்கள் தயாரித்தல் குழந்தைகளின் படைப்பு திறன்களை வெளிப்படுத்தவும் ஆராயவும் அனுமதிக்கிறது. களிமண்ணின் தொட்டுணரக்கூடிய தன்மை குழந்தைகளைத் தொடவும், உணரவும் மற்றும் கையாளவும் அனுமதிக்கிறது. இதனால் அவர்களின் தொடுதல் உணர்வும் கற்றல் அனுபவமும் மேம்படுகிறது.

களிமண் கையாளுதல் மாணவர்களின் சிறந்த மோட்டார் திறன்களை மேம்படுத்த உதவுகிறது. இது எழுதுதல், வரைதல் மற்றும் பிற செயல்பாடுகளுக்கு அவசியம். களிமண் பொருட்கள் தயாரித்தல் பெரும்பாலும் குழுக்களாக நடக்கிறது, இது மாணவர்களின் தகவல் தொடர்புதிறனை வளர்க்க உதவுகிறது. அவர்கள் தங்கள் யோசனைகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள், கேள்விகளைக் கேட்கிறார்கள் மற்றும் தீர்வுகளைப் பற்றி விவாதிக்கிறார்கள்.

களிமண்ணுடன் பணிபுரிவது மாணவர்கள் தங்கள் உணர்ச்சிகளை நிர்வகிக்கவும் தங்களை வெளிப்படுத்தவும் உதவுகிறது. இது, அவர்களின் சமூகமயமாக்கல் திறன்களை மேம்படுத்துகிறது. கூட்டாக வேலை செய்யவும் கற்றுக் கொடுக்கிறது. களிமண்ணுடன் பணிபுரிவது அனுபவத்தை ஊக்குவிக்கிறது, இது மாணவர்கள் தங்கள் திறன்களில் நம்பிக்கையை வளர்க்க உதவுகிறது. களிமண்ணைக் கொண்டு பொருட்களை உருவாக்கம், எது சரியான அல்லது தவறான வழி என்பதை கற்றுக் கொள்கிறார்கள். மேலும் இது அவர்களின்வாழ்க்கையின் மற்ற செயல்பாடுகளில் உதவியாக இருக்கும்.

வகுப்பறையில் குழந்தைகளின் எழுத்து அழகாக இருப்பதற்காக செயல்படுத்தப்படும் இந்த களிமண் பொருட்களைத் தயாரிப்பது, படைப்பாற்றல், சிக்கல் தீர்க்கும் திறன்களுடன், சமூக வளர்ச்சியை ஊக்குவிக்கும் ஒரு நம்பமுடியாத பயனுள்ள செயலாகும்.

உயர்நிலை வகுப்புக் குழந்தைகளுக்கும் இச்செயல்பாடுகளைத் தரலாம். சிற்பம் செய்தல், ஓடு தயாரித்தல் மற்றும் கட்டிடம் கட்டுதல் போன்றசெயல்களைத் தரலாம். அவர்களின் படைப்பாற்றல் திறன் மேம்படுவதுடன், கூட்டாக வேலைபார்க்கும் திறனைப் பெறுவார்கள். ஒவ்வொருவரும் புரிதலுடன் உருவாக்கும் களிமண் பொருட்கள் தனித்துவமானதாகவும், நுட்பமானதாகவும் விளங்கும்.

அன்றாட வாழ்வை பிரதிப்பலிப்பதாகவும், அதேவேளையில் பழமையும்கலந்த கலவையாக இப்படைப்புகள் உருவாவதைக் காணலாம். ஒவ்வொருவருக்குள் உள்ள கலைஞன் வெளிப்படுவான்.

மாணவர்களிடம் கூட்டு உணர்வுமேலோங்கும். வகுப்பறை பிடித்தமானதாகும். வகுப்பறையிலுள்ள பலசிக்கல்களைத் தீர்க்க, இதுமாதிரி யான செயல்களைக் கொடுப்போம். முயற் சிப்போம்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in