

திருடர்கள் தாங்கள் கொள்ளை அடித்த பணத்தை காட்டிற்குள் நிலவு வெளிச்சத்தில் வைத்து பிரித்துக் கொண்டார்கள். அப்போது, நம் அரசர் சரியான சோம்பேறியாக இருக்கும் வரை நமக்கு கவலை இல்லை. மக்களை காவல் காப்பதற்கு யாரும் வர மாட்டார்கள் என்று பேசிக் கொண்டு இருந்தனர்.
அந்த வழியே வந்த ஒற்றர்கள் அதைக்கேட்டுவிட்டு அரசரிடம் போய் சொல்லிவிட்ட னர், அரசருக்கோ கோபம் வந்து விட்டது. அந்தத் திருடர்கள் எங்கு இருந்தாலும் பிடித்துவாருங்கள் என்று கட்டளையிட்டார். படை வீரர்களும் திருடர்களை தேடி அடைந்தனர். ஒரு மரத்தடியில் மீண்டும் பணத்தை எண்ணிக் கொண்டு இருந்தார்கள்.
திருடர்களோ நம்மை படை வீரர்கள் பிடிக்க வருவதை அறிந்து ஓட்டம் பிடித்தனர். எங்களை பிடிப்பதை விட்டுவிட்டு உங்கள் அரசரை நாடு பிடிக்கச் சொல்லுங்கள் என்று ஒரு திருடன் கத்தினான். படை வீரர்களுக்கோ கோபம் உச்சத்தை அடைந்தது.
ஒரு வழியாக விரட்டிப் பிடித்து அரசர் முன்பு நிறுத்தினர். மன்னரோ திருடர்களை பார்த்து செய்வதோ திருட்டு வேலை. என்ன துணிச்சல் இருந்தால் ஒரு நாட்டு அரசரையே வாய் கொழுப்பாக பேசுவீர்கள். காட்டில் உள்ள மரங்களை எல்லாம் வெட்டி அரண்மனையில் கொண்டு வந்து சேர்க்க வேண்டும் என்று தண்டனை வழங்கினார்.
திருடர்களோ நம் வாய் கொழுப்பால் தானே நாம் மாட்டிக் கொண்டோம். இனிமேல் யாரையும் துடுக்காக நாம் பேசக் கூடாது என்று உணர்ந்து கொண்டனர். நாம் எதை காக்காவிட்டாலும் நாவை கட்டுப்படுத்த வேண்டும் இல்லையேல் சொற் குற்றத்திற்கு ஆளாகி விடுவோம் என்பதை தான் வள்ளுவர்
யாகாவாராயினும் நா காக்க காவாக்கால்
சோகாப்பர் சொல் இழுக்குப் பட்டு. - குறள்:127
என்று கூறுகிறார்
அதிகாரம் :அடக்கமுடைமை
- கட்டுரையாளர்: பள்ளி ஆசிரியர்