வேலைக்கு நான் தயார் - 6: நாட்டின் தலைநகரில் படிக்கலாம்

வேலைக்கு நான் தயார் - 6: நாட்டின் தலைநகரில் படிக்கலாம்
Updated on
1 min read

இந்திய அரசு உயர்கல்வி நிறுவனங்களில் சேருவதற்காக நடத்தப்பட்டு வரும் பல்வகை நுழைவுத் தேர்வுகள் குறித்து கடந்த சில வாரங்களாகப் பார்த்து வருகிறோம். நீங்கள் மேலும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய மூன்று நுழைவுத் தேர்வுகள் குறித்து இன்று பார்க்கலாம் வாங்க.

நாட்டிலுள்ள தலைசிறந்த 24 தேசிய சட்ட பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும் இளங்கலை / முதுகலை சட்டப் படிப்புளுக்கான சேரக்கைக்காக CLAT (The Common Law Admission Test) தேர்வு நடத்தப்படுகிறது. பிளஸ் 2-வுக்கு பிறகு இதனை எழுதலாம். மொத்தம் 2 மணி நேரத் தேர்வாகும். இதுதவிர புது டெல்லியில் உள்ள தேசிய சட்ட பல்கலைக்கழகமானது நேஷனல் ஆல் இண்டியா லா என்ட்ரன்ஸ் டெஸ்ட்டின் மதிப்பெண்களை கொண்டு சேர்க்கை மேற்கொள்கிறது.

அடுத்ததாக, டெல்லி பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ள 16 கல்லூரிகளின் தொழில்சார் இளங்கலை படிப்புகளுக்காகவே பிரத்தியேகமாக நடத்தப்படும் நுழைவுத் தேர்வு உள்ளது. DUJAT (Delhi University Joint Admission Test) எனப்படும் இந்த தேர்வு தேசிய அளவிலான தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படுகிறது. DUET : Delhi University Entrance Test) எனும் தேர்வையும் இளங்கலை, முதுகலை, எப்பிஃல். முனைவர் படிப்புகளின் சேர்க்கைக்காக தேசிய தேர்வு முகமை நடத்துகிறது.

இத்தேர்வானது நாட்டின் 18 முக்கிய நகரங்களில் நடைபெறுகிறது. இது 2 மணி நேர ஆன்லைன் தேர்வாகும். இத்தேர்வானது பி.டெக் (ஐடி) பிஏ ஹானர்ஸ் மல்டிமீடியா அண்ட சோசியல்சயின்ஸ், பி.ஏ. ஹானர்ஸ் மல்டிமீடியா மாஸ் கம்யுனிகேஷன், பி.எஸ்.சி. (பிசிக்கல் ஜுகேசன், ஸ்போர்ஸ்ட் சயின்ஸ்) பி.எம்.எஸ். பி.பி.ஏ, பி.ஏ. ஹானர்ஸ், பிசிஎஸ் எக்னாமிக்ஸ், பி.எல்.எட் ஆகிய படிப்புகளை உள்ளடக்கியது.

நாம் இதுவரை பார்த்தவைதான் இந்தியாவில் நடத்தப்படும் முக்கியத் நுழைவுத் தேர்வுகளாகும். இதுதவிர பல்வேறு தனியார் பல்கலைக்கழகங்களும் மாணவர் சேர்க்கைக்காக நுழைவுத்தேர்வுகள் நடத்துகின்றன.

உயர்கல்வி, வேலைவாய்ப்பு தொடர்பான உங்களது சந்தேகங்களை ‘வேலைக்கு நான் தயார்’ பகுதிக்கு vetrikodi@hindutamil.co.in என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி நிபுணரின் வழிகாட்டுதல் பெறுங்கள்.

- கட்டுரையாளர்: வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை முன்னாள் இணை இயக்குநர்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in