கதை கேளு கதை கேளு: நாடுகள் - சில தகவல்கள்

கதை கேளு கதை கேளு: நாடுகள் - சில தகவல்கள்
Updated on
2 min read

நம் நாடு ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டுக் கிடந்தது பற்றி வரலாறு பாடப்புத்தகத்தில் படித்திருப்போம். இதேபோல உலகம் முழுவதும் உள்ள நாடுகளை பல காலனியாதிக்க நாடுகள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்துள்ளன. சில நாடுகள் தற்போதும் கூட காலனியாதிக்க ஆட்சியில் உள்ளன என்பது அதிர்ச்சியும், ஆச்சரியமுமாய் உள்ளது.

மேற்கத்திய நாடுகள் பொருளாதாரத் தில் வலிமை பெற்ற நிலையில் அல்லது பல நாடுகளை கண்டுபிடிக்கும் ஆர்வத்தில், கடற்பயணம் செய்வதில் விருப்பமுள்ள வர்களைத் தேர்ந்தெடுத்து, நாடுகளை கண்டுபிடித்து, அப்பகுதியிலிருந்து மனிதர்களையும் பொருட்களையும் தங்கள் நாட்டிற்குக் கடத்திச் சென்றன. அடிமை மனிதர்களை தங்கள் நாட்டிலோ அல்லது தங்கள் ஆட்சிக்குக் கீழுள்ள பகுதியிலோ நிலத்தைப் பண்படுத்தவும், இதர தொழில்களைச் செய்யவும் பயன்படுத்தின.

புதிய நாடுகள்: ‘நாடுகள்- சில தகவல்கள்' புத்தகத்தில் இதுவரை நாம் கேள்விப்பட்டிராத நாடுகளைப் பற்றிய தகவல்கள் உள்ளன. ஒவ்வொரு நாடும் புவியியல் ரீதியாக, எந்தக் கண்டத்தில் எந்த இடத்தில் அமைந்துள்ளது என்ற வரைபடமும் கொடுக்கப்பட்டுள்ளது. பிரான்சு, பிரெஞ்சு, டச்சு,அமெரிக்க நாடுகள் தங்கள் ஆட்சிப் பரப்பை உலகம் முழுவதும் பரப்பியுள்ளன.

ஸௌ தொமே, ப்ரின்ஸியே என்றஇரண்டு தீவுகள் 15-ம் நூற்றாண்டில்போர்ச்சுக்கீசியர்களால் கண்டுபிடிக்கப்பட்டு காலனியாக்கப்பட்டது. இந்நாடுகள்சர்க்கரை உற்பத்தியில் ஆப்பிரிக்காவி லேயே முதன்மையான நாடாக இருந்துள்ளன. அவற்றால் உருவான வளமானமண் விவசாயத்திற்கு ஏற்றதாக இருந்துள்ளது. இதைக் கண்டறிந்த போர்ச்சுக்கீசியர், இந்தப் பகுதியில் கரும்பு விவசாயத்தை பெருக்கினர். 1975 ஜூலை 12 ல் போர்ச்சுக்கலிடம் இருந்து விடுதலை கிடைத்தது. பிறகு ஒரு கட்சி ஆட்சிமுறை ஏற்படுத்தப்பட்டது.

ஒரு மன்னராட்சி நாடு - டாங்கா: ஆஸ்திரேலியாவுக்கு வடகிழக்கில் பசிபிக் கடற்பகுதியில் இருக்கும் சுமார் 1000 தீவுகள் கொண்ட பகுதிதான் பாலினேசியா. அவற்றின் அருகில் இருக்கும் சுமார் 170 தீவுகளைக் கொண்ட நாடுதான் டாங்கா. பசிபிக் கடற்பகுதியில் இருக்கும் ஒரே மன்னராட்சி நாடு. 170 தீவுகளில் 36 தீவுகளில் மட்டுமே மக்கள் வசிக்கின்றனர். மக்கள்தொகை ஒரு லட்சம். மக்களில் பெரும்பாலானோர் விவசாயத்தையே நம்பியுள்ளனர்.

பிரெஞ்ச் கயானா: பிரேசில் மற்றும் சூரினாம் நாடுகளுக்கு இடையே இருக்கும் பகுதி பிரெஞ்ச் கயானா. பல காலனியாதிக்க நாடுகளின் ஆட்சிக்குப் பின்னர் பிரான்ஸ் நாட்டு ஆதிக்கத்தில் கயானா 17-ம்நூற்றாண்டு முதல் இருந்துள்ளது. இங்குள்ள சிறைகளில் தண்டனை கைதிகள் அடைத்துவைக்கப்பட்டுள்ளனர்.

மக்களிடையே பிரெஞ்ச் கயானாவின் சுதந்திர உணர்வு குறித்து ஆர்வம் இல்லை. பிரெஞ்ச் கயானா நிலநடுக்கோட்டிற்கு அருகில் உள்ளதால் செயற்கைக் கோள்கள் ஏவுவதற்கு ஏற்ற இடமாக உள்ளது. பிரான்ஸ் அரசின் ஏவுதளம் இங்கு அமைந்துள்ளது.

கிறிஸ்மஸ் தீவு: இந்தியப்பெருங்கடலில் அமைந்துள்ள மிகச்சிறிய தீவு. 1615-ல் ரிச்சர்ட் ரோ என்ற ஐரோப்பியர் இத்தீவைக் கண்டுபிடித்தார். கிழக்கிந்தியக் கம்பெனி கப்பலின் கேப்டனான வில்லியம் மினோர்ஸ்1643-ல் கிறிஸ்மஸ் தீவு என பெயரிட்டார். பிரிட்டன் ஆய்வாளரான ஜான்முர்ரே 1887-ல் இப்பகுதியில் பாஸ்பேட் இருப்பதைக் கண்டுபிடித்தார். தொடர்ந்து இத்தீவு பிரிட்டன் ஆளுகைக்கு உட்பட்டது. மக்கள்தொகை வெறும் இரண்டாயிரம் பேர் மட்டுமே. அனைவருமே புத்தமதத்தை சேர்ந்தவர்கள். ஒரு பள்ளி, நூலகம், மருத்துவமனை செயல்படுகின்றன.

மாலத்தீவு: பூமாலை போன்ற அமைப்பில் இத்தீவுகள் இருப்பதால் மாலைத்தீவு என்ற தமிழ்ச்சொல்லால் குறிக்கப்பட்டது. 1968- மாலத்தீவு முழு ஜனநாயக நாடாகியது. உலக வெப்பமயமாதல் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள இந்நாடு, இன்னும் சில ஆண்டுகளில் முழுமையாக கடலில் மூழ்கிவிடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

சரவணன் பார்த்தசாரதியின் 'நாடுகள் -சில தகவல்கள்' புத்தகம் புவியியல்ஆர்வத்தை ஏற்படுத்தும். வகுப்பறைகளில்உலகப்படத்தை வைத்து, இப்புத்தகத்திலுள்ள வரைபட விளக்கத்துடன் உள்ளநாடுகளை கண்டறியச் சொல்லி விளையாடலாம். புவியியல் பாடப்பகுதியில் பல கலந்துரையாடல்களை மேற்கொள்ள இப்புத்தகம் உதவும். நாடுகள் பற்றிய அரியதகவல்களை அறிந்து கொள்ள இப்புத்தகத்தை வாசிக்கலாம்.

- கட்டுரையாளர்: குழந்தை நேய செயற்பாட்டாளர், ஆசிரியர், அரசுப்பள்ளி, திருப்புட்குழி, காஞ்சிபுரம் தொடர்புக்கு: udhayalakshmir@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in