

நெருக்கடியான சந்து வளைந்து நெளிந்து ஓடும் ஆறு போல் இருக்கின்ற தெருவில் நெல்சன் வசித்து வந்தான். புறா வளர்ப்பதில் மிகவும் ஆர்வம் உள்ளவன். அதிகாலையிலே கூட்டில் இருக்கும் புறாவைத் தேடி போவான்.
அவன் தோள்களில் இரண்டும் கால், கைகளில் இரண்டுமாய் புறாக்கள் அவனைச் சுற்றி வட்டமிடும். அவைகளிடம் கொஞ்சி விளையாடி விட்டு இரை வைப்பான். பிறகு அலுவலகத்திற்கு செல்வான். வேலை நெருக்கடியில் புறாக்களோடு விளையாட நேரமில்லாத நாட்களில் சோர்வாக இருப்பான்.
அருகில் குடியிருப்போருக்கு புறாவைக் கண்டாலே பிடிக்காது. அவற்றின் எச்சங்கள் வீட்டை அசுத்தம் செய்வதும், புறாக்களின் புனுகு சத்தமும் எரிச்சலாக இருந்தது. அவர்கள் இந்த புறாக்களை நெல்சனுக்கு தெரியாமல் பிடித்து புறநகர் பகுதியில் விட்டுவிடுவோம் என்ற எண்ணத்தில் திட்டமிட்டு கொண்டு இருந்தார்கள்.
குழந்தைகளோ பள்ளி விட்டு வந்ததும் பறவைகளை பார்த்து ரசிப்பதும் தங்களுக்கு கொடுக்கும் தின்பண்டங்களை கொடுப்பதும் மகிழ்ச்சியாய் இருந்தார்கள். இவற்றை எல்லாம் கவனித்துக் கொண்டு இருந்த பக்கத்து வீட்டுக்காரர். நம்மோடு வாழும் உயிர்களை நாம் நேசிக்காவிட்டாலும் அவற்றிற்கு தீங்கு செய்யக் கூடாது.
நாம்புறாக்களை தெரியாமல் எடுத்து அப்புறப்படுத்துவோம் என்று நினைத்ததே தவறு. ஆசையோடு வளர்ப்பவர்கள் குடும்பத்தில் இருப்பவரை பிரிவது போல் வருந்துவர். பிறருக்கு சொந்தமான பொருளை அவருக்கே தெரியாமல் எடுப்போம் என்று நினைத்ததே திருட்டுக்கு சமம் என்பதை உணர்ந்தனர். மறுநாள் முதல் ஆசையோடு புறாக்களுக்கு உணவை வைத்தனர். இதை தான் வள்ளுவர்
உள்ளத்தால் உள்ளலும் தனது பிறன் பொருளைக்
கள்ளத்தால் கள்வேம் எனல். குறள்;282
அதிகாரம்;கள்ளாமை
- கட்டுரையாளர்: பள்ளி ஆசிரியர்