

சிறந்த பட்டப் படிப்புகளில் சேர நீட், ஜெஇஇ தவிரவும் வேறென்ன நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன என்று பெற்றோர் ஒருவர் கேட்டிருந்தார். அவருக்கான விடை காண்போம் வாருங்கள்.
ஃபேஷன் தொழில்நுட்பப் படிப்புகளுக்கு எப்போதுமே மவுசு அதிகம். நாடு முழுவதும் 16 முக்கிய நகரங்களில் நிஃப்ட் எனப்படும் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபேஷன் டெக்னாலஜி கல்வி வளாகங்கள் உள்ளன. சென்னையில் தரமணியில் இவ்வளாகம் உள்ளது. இங்கு இளங்கலை ஃபேஷன் டெக்னாலஜி மற்றும் பி.எஸ்.(B.Des) (வடிவமைத்தல்) படிப்புகளை அது தொடர்புடைய பல பாடப்பிரிவுகளில் வழங்கப்படுகிறது.
இப்படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் நடத்தப்படுகிறது. இத்தேர்வுகள் GAT (General Ability Test) மற்றும் CAT (Creative Ability Test) ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்கும். இதன் தொடர்ச்சியாக Situation Test என்கிற தேர்வும் நடத்தப்பெறும். இத்தேர்வானது சூழ்நிலைக்கேற்ப கிடைக்கப் பெறும் சாதனங்களை கொண்டு வடிவமைத்தல் தொடர்பானது. அதன் பின்னர் குழு விவாதம் மற்றும் நேர்காணல் நடைபெறும்.
தடயவியல் நிபுணர் ஆகலாம்: இன்று உலகம் முழுவதும் பல்வேறு வகையான குற்றங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது. அதிலும் சைபர் குற்றங்கள் பூதாகரமாக வளர்கிறது. இதனை கட்டுப்படுத்தவும் இத்தகைய குற்றங்களை கண்டுபிடிக்கவும் பல துறைகளில் தடவயியல் நிபுணர்கள் தேவைப்படுகிறார்கள். இதற்கென மத்திய அரசு ஓர் உயர்நிலை பல்கலைக்கழகத்தை தோற்றுவித்துள்ளது.
இக்கல்வி நிறுவனம் காந்தி நகர், டெல்லி, கோவா, திரிபுரா ஆகிய நகரங்களில் செயல்படுகிறது. இங்கு பி.எஸ்சி., எம்.எஸ்.சி.ஃபோரன்சிக் சயின்ஸ், பிஜி டிப்ளமா இன் ஃபிங்கர் பிரிண்ட், க்ரைம் சீன் ஃபோட்டாகிராபி, டிஎன்ஏ ஃபோரன்சிக், எம்.எஸ்சி. மல்ட்டி மீடியாஃபோரன்சிக், எம்பிஏ ஃபோரன்சிக் அக்கவுன்டிங்போன்ற பல்வேறு பாடப்பிரிவுகள் வழங்கப்படுகின்றன. இப்படிப்புகளில் சேர நேஷனல் ஃபோரன்சிக் அட்மிஷன் டெஸ்ட் (NFAT- National Forensic Admission Test) எழுதி தேர்ச்சி அடைய வேண்டும்.
அடுத்து, மாற்றுத் திறனாளிகளுக்கு உதவிடும் வகையிலான உபகரணங்கள் மற்றும் பயிற்சிகள் தொடர்பான படிப்புகளில் CET எனும் Common Entrance Test தேர்வின் மூலம் சேரலாம். இதன் மூலம் சென்னை முட்டுக்காடு பகுதியில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஃபார் எம்பவர் மெண்ட் ஆஃப் பர்சன்ஸ் வித் மல்டிபிள் டிஸ்ஏபிலிட்டி (NIEPMD), கொல்கத்தாவில் உள்ள நேஷனல் இன்ஸ்ட்டியுட் ஆப் லோக்கோ மோட்டார் டிஸ்ஏபிலிட்டி (NILB), கட்டாக்கில் உள்ள சுவாமி விவேகானந்தா நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ரிஹேபிலிடேஷன் (SVNIRTAR), புதுடெல்லியில் உள்ள பன்டிட் டீன்தாயள் உபாத்தியாய நேஷனல் இன்ஸ்டிடியூட் ஃபார் பர்சன்ஸ் வித் பிசிக்கல் டிஸ்ஏபிலிட்டி (PDVINIPPD) உள்ளிட்ட அரசு கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிக்கலாம். இவற்றில் BPT (Physiotherapy), BOT (Occupational Therapy), BOP (Prosthetics