கனியும் கணிதம் 27: பயமுறுத்தும் புதிர்கள்

கனியும் கணிதம் 27: பயமுறுத்தும் புதிர்கள்
Updated on
2 min read

பள்ளியில் புதிதாக ஒரு அரங்கம் திறக்கப்பட்டது. அது பள்ளியில் இருக்கும் மன்றங்களுக்கான அரங்கம். ஜூலை 1-ம் தேதி திறந்தபோது எல்லாம் மன்றங்களும் அங்கே கூடின. மொத்தம் ஐந்து மன்றங்கள் பள்ளியில் இருந்தன. கணித மன்றம் ஒரு நாள் விட்டு ஒரு நாள் சந்திக்கும்.

ஓவிய மன்றம் மூன்று நாட்களுக்கு ஒரு முறை சந்திக்கும்.கதை மன்றம் நான்கு நாட்களுக்கு ஒருமுறை சந்திக்கும், தமிழ் மன்றம் ஐந்து நாட்களுக்கு ஒருமுறை சந்திக்கும்.அறிவியல் மன்றம் ஆறு நாட்களுக்கு ஒருமுறை சந்திக்கும். ஜூலை 1 முதல் அவர்கள் செயல்பாடுகள் துவங்கின. அரங்கம் முழுமையான செயல்பாட்டில் இருந் தது. ஞாயிற்றுக் கிழமைகளிலும் கூடுவார்கள்.

அரங்கினை நிர்வகிக்கும் கணக்கு கோவிந்தனை அழைத்து பள்ளியின் முதல்வர் ஒரு கோரிக்கை வைத்தார். “ஐந்தாவது முறை என்றைக்கு எந்த மன்றமும் அரங்கில் கூடாமல் காலியாக இருக்கின்றதோ அன்றைக்கு நாம் பள்ளி ஆண்டுவிழாவை வைத்துக் கொள்வோம்” என்றார். என்றைக்கு ஆண்டுவிழா வைக்கலாம்? மாலை நேர மையத்தின் வழிகாட்டி உமா இந்த புதிரினைக் குழந்தைகளிடம் வாசித்தார்.

“உமா அக்கா, இது ரொம்ப கஷ்டமா இருக்கு. வேற எளிமையான புதிரா போடலாமே” என்றான் கணேஷ். “ஒரு புதிரின் விடையைக் கண்டுபிடிக்கும் முன்னர் அந்தப் புதிரைத் திரும்பப் திரும்ப படித்தாலே போதும். அதனால் நாம 4-5 முறை புதிரை படித்துவிடுவோம்” என்றார் உமா அக்கா. எல்லோரும் வாசித்து முடித்தனர். அடுத்ததாகப் புதிரில் இருக்கும் கேள்வியை எழுதும் முன்னர் தெரிந்த தகவல்களை எழுதினார்கள்.

ஜூலை 1-ல் அனைத்து மன்றங்களும் சந்திப்பு. மொத்தம் ஐந்து மன்றங்கள் உள்ளன. கணித மன்றம் ஒரு நாள் விட்டு ஒரு நாள் சந்திக்கும். ஓவிய மன்றம் மூன்று நாட்களுக்கு ஒரு முறை சந்திக்கும். கதை மன்றம் நான்கு நாட்களுக்கு ஒருமுறை சந்திக்கும், தமிழ் மன்றம் ஐந்து நாட்களுக்கு ஒருமுறை சந்திக்கும். அறிவியல் மன்றம் ஆறு நாளுக்கு ஒருமுறை சந்திக்கும்

கேள்வி : எப்போது ஐந்தாவது முறையாக அரங்கம் காலியாக இருக்கும். இப்ப நாம் ஒரு நாடகம் மாதிரி நடித்துக்காட்டலாமா? என்றார் அக்கா. ஒருவர் கணக்கு கோவிந்தன், ஒவ்வொரு மன்றத்திற்கும் ஒரு ஒருங்கிணைப் பாளர்.

”கணக்கு கோவிந்தன் - கரும்பலகையில் 1- 30 வரை எழுதுங்க” எழுதினார். “கணித மன்றம் என்றெல்லாம் சந்திக்குமோ அதனை எல்லாம் எழுதவும். இப்படியே எல்லா மன்றங்களும் எழுதி வாருங்கள்” என்று கூறினார் ஆசிரியர்.

கணிதம் - 1,3,5,7,9,11,13,15,17,19,21,23,25 .

ஓவியம் - 1,4,7,10,13,16,19,22,25,......

கதை - 1,5,9,13,17,21,25

தமிழ் - 1,6,11,16,21,25,29,.....

அறிவியல் - 1,7,13,19,25,31,

அருமையா எழுதினீங்க பசங்களா. இப்ப போய் கோவிந்தன் எழுதின 1-31ல் உங்கள் எண்களை அழித்துவிட்டு வாங்க

கணித ஒருங்கிணைப்பாளர் அழித்துவிட்டுவந்தார், பின்னர் ஓவிய மன்ற ஒருங்கிணைப் பாளர் அழித்தார். கதை ஒருங்கிணைப்பாளர் -“அம்மா, எனக்கு அழிக்க ஒன்றுமே இல்லை ஏற்கனவே கணித மன்ற ரபீக் அழித்துவிட்டான்”

தமிழ் ஒருங்கிணைப்பாளர் அழிக்கச் சில எண்கள் மட்டுமே இருந்தன. அறிவியல் ஒருங்கிணைப்பாளர் அழிக்கவும் தேதிகள் இல்லை. கடைசியாக மிஞ்சியவை “2, 8,12,14,18, 20, 24,

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in