கதைக் குறள் 33: பிறப்பால் எல்லோரும் சமம்

கதைக் குறள் 33: பிறப்பால் எல்லோரும் சமம்
Updated on
1 min read

கிளி அக்கா சேதி கேட்டீர்களா? என்று குரல் கொடுத்தபடி அருகே வந்தது மயில். இப்படி பீடிகை போட்டா நான் என்னத்த கண்டேன். சொல்லு சொல்லு என்றது கிளி. உன்னை கூட்டில் அடைத்து வேடிக்கை பார்ப்பது மட்டுமல்லாமல் நீ ஜோதிடக்காரன் என்று இந்த மக்கள் சொல்கிறார்கள். அ

துமட்டுமா எனக்கு ஆட்டக்காரன் என்றும் தூக்கணாங்குருவிக்கு கட்டிட பொறியாளர் என்றும், மீன் கொத்திக்கு கொத்தனார் என்றும் பெயர் வைத்து இருக்காங்களாம். என்னத்துக்கு நம்மை வம்புக்கு இழுக்கிறார்கள் இந்த மனிதர்கள். அவர்களுக்குள் தான் ஆயிரம் ஆயிரம் பிரிவு உண்டு. நாம் செய்யும் தொழிலை வைத்தும் பிரித்து பார்க்கிறார்களே. எப்படி இருந்தாலும் நாம் பறவைகள் தானே.

அவற்றில் தானே மகிழ்ச்சி இருக்கு. நம்மிடம் உள்ள ஒற்றுமை அவர்களிடம் இல்லையே. பிறப்பால் எல்லோரும் சமம் என்பதை இந்த மக்கள் எப்ப தான் உணர்வார்களோ. அந்தக் காலத்தில் செய்யும் தொழிலை வைத்து பிரித்தாங்க. இப்ப அப்படி அல்ல. அவர்கள் செய்யும் செயலில் தான் பெருமையே இருக்கு என்று கிளி அக்கா கூறியது. நீ உணர்ந்து இருக்க. ஆனால் இதை மக்கள் உணர வேண்டுமே என்று அலுத்துக் கொண்டது மயில் அக்கா. சரி ஜோசியரே உன் எண்ணம் நிறைவேறட்டும் இதைத் தான் வள்ளுவர்

பெருமை அதிகாரத்தில்

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா

செய்தொழில் வேற்றுமை யான். (குறள்-972)

என்றார்.

- கட்டுரையாளர்: பள்ளி ஆசிரியர்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in