

கனிமொழியின் அம்மா ஒரு எழுத்தாளர். இரவு படுக்கும் போது கனிமொழிக்கு சின்ன சின்ன கவிதை சொல்வாள். அப்போது அவள் அம்மா அம்மா நம் வீட்டு கன்றுக்குட்டி, கோழி பத்தி சொல்லுங்க அம்மா என்பாள். அவளும் சேவலுக்கு கொண்டை உண்டு, கோத்திரம் இல்லை,
கொக்கரக்கோ சேவல் அக்கறையோடு கூவும் என்று அழகு கவி சொல்வாள்.
கனிமொழி எப்படிமா கவிதை எல்லாம் சொல்றீங்க என்று கேட்டாள். அந்தக் காலத் தில் எங்க வீட்டுக்கு அப்பாவைத் தேடி நண்பர்கள் வட்டம் வருவார்கள். எல்லோரும் புலவர்கள் தான். ஒருவருக்கொருவர் அந்த கட்டுரை எழுதினேன். பாப்பா பாட்டு எழுதி இருக்கேன் என்று சொல்லி அளவளாவிக் கொள்வார்கள்.
இடையிடையே எங்க பாட்டியோ தேநீர், பிஸ்கட் கொடுத்து உபசரிப்பாங்க. இதை எல்லாம் பார்க்கும் போது எனக்கு மிகவும் மகிழ்ச்சியா இருக்கும். அவர்கள் சென்றதும் மீண்டும் எப்போது பார்ப்போம் என்று நினைக்கும் அளவிற்கு வருத்தமாக இருக்கும். பின்னர் நானும் கவி சொல்ல ஆரம்பித்தேன். என்னைச் சுற்றி ஒரு வட்டம் கூடி இருக்கு என்று மகிழ்ச்சி பொங்க சொன்னாள்.
சரி சரி காலையில் பள்ளிக்கு போகனும் தூங்கு என்றாள்.
இதைத் தான் வள்ளுவர் கல்வி அதிகாரத்தில்
உவப்பத் தலை கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில்
என்றார்
குறள்: 394
- கட்டுரையாளர்: பள்ளி ஆசிரியர்