

வைரத்தின் எடையை காரட் அளவில் சொல்கிறார்களே, ஒரு காரட் என்றால் எத்தனை கிராம்? தங்கத்தைக் குறிப்பிடும் காரட்டும் இதுவும் ஒன்றா, டிங்கு?
– என். மணிகண்டன், ஜி.பி. பப்ளிக் பள்ளி, மேல்மருவத்தூர்.
வைரத்தில் காரட் என்பது அதன் எடையைக் குறிக்கிறது. ஒரு காரட் என்றால் 200 மில்லி கிராம், அதாவது 0.2 கிராம் எடை. 5 காரட் வைரம் என்றால் 1 கிராம் எடையைக் குறிக்கும். தங்கத்தில் காரட் என்பது அதன் சுத்தமான தன்மையைக் குறிக்கிறது. தங்கத்தால் மட்டும் அணிகலனைச் செய்துவிட முடியாது. தங்கம் மென்மையானது. அதனால் தங்கத்துடன் தாமிரம் போன்ற உலோகத்தைச் சேர்த்துதான் அணிகலனைச் செய்வார்கள். சுத்தமான தங்கம்என்பதை 24 காரட் என்று குறிப்பிடுகிறார்கள். இதில் 18 பங்கு தங்கத்தையும் 6 பங்கு தாமிரத்தையும் கலந்து செய்கிறார்கள். பொதுவாக தங்க அணிகலன்கள் 18 காரட்டில் செய்யப்படுகின்றன, மணிகண்டன்.
நீங்களும் உங்கள் கேள்விகளை அனுப்பி வைக்கலாம். அனுப்ப வேண்டிய முகவரி :
டிங்குவிடம் கேளுங்கள்,
வெற்றிக்கொடி,
கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை,
சென்னை - 600 002.
மின்னஞ்சல்: vetrikodi@hindutamil.co.in