

சரண் யாரைப் பார்த்தாலும் கல கலவென பேசுவான். ஆனால் அன்று மவுன விரதம் இருப்பது போல் ஆழ் கடல் அமைதியாய் இருந்தான். அவனைப் பார்க்க வந்த நண்பன் நந்தன் ஏண்டா இவ்வளவு சோகமாக இருக்கிறாய். எல்லோரையும் நீதானே சிரிக்க வைப்பாய் என்று கேட்டான். உடனே பொள பொளவென்று கண்ணீர் கொட்டியது.
நந்தா என் மனம் எல்லாம் எங்கே என்னைத் திருடன் என்று எல்லோரும் சொல்லி விடுவார்களோ என்று பயமாக இருக்கிறது. என்ன நடந்ததுவிட்டது உனக்கு இப்படி எல்லாம் யோசனை வருகிறது என்றான். நேற்று கோவில் திருவிழாவில் கலை நிகழ்ச்சி பார்த்துக் கொண்டு இருந்தபோது ஒரு குழந்தை அம்மாவைத் தேடி என்னிடம் வந்தது. அதன் கழுத்தில் இருந்த தங்க செயினை கழற்றி வைத்துள்ளேன். யாரும் வந்து கேட்பார்களோ, நான் மாட்டிக் கொள்வேனோ என்ற பயம் தான். இந்த விசயம் அம்மாவுக்கு தெரியுமா? என்றான். இல்லையடா, அம்மாவோ இதய நோயாளி நான் திருடி விட்டேன் என்று கேட்டதும் மயங்கி விடுவார்கள் என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போதே காவல் நிலையத்தில் இருந்து காவலர்கள் வண்டியில் இருந்து வேகமாக இறங்கி வந்தார்கள். இதைத்தான் திருடும் ஆசையே நம்மை துன்பத்திற்கு ஆளாக்கும் என்பதை வள்ளுவர்
களவின் கன்றிய காதல் விளைவின் கண்
வீயா விழுமம் தரும்
என்றார்
அதிகாரம் 24, கள்ளாமை
குறள்:284
- கட்டுரையாளர்: பள்ளி ஆசிரியர்