

மழை பெய்யும் பொழுது தேன்கூடுகள் கலைந்துவிடுமா, டிங்கு?
-பி.வித்யா, 6-ம் வகுப்பு, விக்னேஷ் வித்யாலயா பள்ளி, திருச்சி.
இயற்கை ஒவ்வோர் உயிரினத்துக்கும் அது பாதுகாப்புடன் வாழ்வதற்கான வழிமுறையை உருவாக்கி வைத்திருக்கிறது. தேன் கூடுகள் மழையில் சேதம் அடையாமல் இருப்பதற்கு ஏற்றார்போல் வடிவமைக்கப்படுகின்றன. மேலிருந்து விழும் மழைநீர் தேன் கூட்டுக்குள் சென்று சேமித்துள்ள தேனையும் புழுக்களையும் சேதப்படுத்தாமல் வழிந்து ஓடிவிடுகிறது. மழை மட்டுமல்ல, கடினமான காற்று, விலங்குகள்கூட அவ்வளவு எளிதாகத் தேன் கூட்டைச் சேதப்படுத்திவிட முடியாது வித்யா.