மகத்தான மருத்துவர்கள் - 31: கருங்காய்ச்சலை விரட்டிய காலா

மகத்தான மருத்துவர்கள் - 31: கருங்காய்ச்சலை விரட்டிய காலா
Updated on
1 min read

1900 வருடங்களின் முற்பகுதி...அசாம், மேற்கு வங்கம், பிஹார் முதலிய கிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த மக்களை புதிய வகைக் காய்ச்சல் தாக்கத் தொடங்கியிருந்தது.

அந்தக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் அதிகளவு காய்ச்சலுடன், உடல் கறுத்து இறுதியில் கொத்துக்கொத்தாக இறக்கவும் செய்தனர். எமன் பாசக்கயிற்றை வீசி ஒவ்வொரு உயிராகப் பறிக்காமல், ஒரு வலையையே வீசி பல உயிர்களை ஒன்றாக அள்ளுவதைப் பார்த்து, ‘காலா-அசார்' (Kala-azar) என்று அந்த கருங்காய்ச்சல் நோயின் பெயரைக் கேட்டாலே மக்கள் நடுங்கினர். புதியதொரு சவாலால் திகைத்து நின்றது மருத்துவ உலகம். அதிலிருந்து விடுபட துரிதமாகப் போராடி, ஒரு தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்க, ஆனால் அந்த அது காய்ச்சலை விட மோசமான பக்கவிளைவுகளை ஏற்படுத்தியது. அந்த சமயத்தில் ஒரு சுலபமான மருந்தைக் கண்டுபிடித்து, காலா-அசார் என்ற எமனுக்கே எமனாக மாறினார் டாக்டர் உபேந்திரநாத் பிரம்மச்சாரி.

பட்டமும் பதக்கமும்

மேற்கு வங்கத்தின் பர்த்வான் மாவட்டத்தில், சர்தங்கா கிராமத்தில் 1873 டிசம்பர் 19-ம் தேதி உபேந்திரநாத் பிரம்மச்சாரி பிறந்தார். கிழக்கு ரயில்வேயில் மருத்துவராகப் பணிபுரிந்த தனது தந்தையைப் போலவே தானும் மருத்துவராகும் கனவுடன் வளர்ந்தார். ஹூக்ளி மற்றும் பிரெசிடென்சி கல்லூரிகளில் அதிக மதிப்பெண்களும் பதக்கங்களும் குவித்து இளநிலைப் பட்டம்பெற்றார். மருத்துவம் பயில கொல்கத்தா மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார். மருத்துவப் பாடங்களிலும் முதல்நிலை பெற்றார். மருத்துவக் கல்வியின் உயரிய ‘மெக்லியாட்ஸ்' மற்றும் ‘குட்-ஈவ்' பதக்கங்களுடன் 1900-ல் முழுமையானதொரு மருத்துவராக வெளியே வந்தார்.

மருத்துவம் பயிலும்போதே மருத்துவ ஆராய்ச்சியில் அதிகஈடுபாடு காட்டினார் உபேந்திரநாத். எம்.டி. மற்றும் பி.ஹெச்டி., பட்டங்களை 1904-ல் பெற்றார். உடனடியாகடாக்கா மருத்துவக் கல்லூரியில் மருத்துவ ஆசிரியராகவும் பணியிலமர்ந்தார். அங்கு சர் ஜெரால்ட் பாம்ஃபேர்ட் எனும் மருத்துவப் பேராசிரியரின் வழிகாட்டுதலின்படி 1905-ல், கொல்கத்தாவின் கேம்ப்பெல் (தற்போதைய நீல் ரத்தன் சர்க்கார்) மருத்துவக் கல்லூரியில் முதன்மை மருத்துவராகப் பணியில் சேர்ந்தார். மாணவர்களுக்கு மருத்துவம் பயிற்றுவிப்பது மட்டுமன்றி, தனது பிரியமான மருத்துவ ஆராய்ச்சிகளிலும் ஈடுபடத் தொடங்கினார்.

அந்த சமயத்தில்தான் கங்கை பிரம்மபுத்திரா நதிக்கரையோர மக்களிடையே மேலே சொன்ன காலா அசார் எனும் மர்மக் கருங்காய்ச்சல் பரவ ஆரம்பித்திருந்தது. பங்களாதேஷ், நேபாளம், பூட்டான் தவிர இந்தியாவிலும் பரவத் தொடங்கியது.

- டாக்டர் சுசித்ரா தாமோதரன்

(மகிமை தொடரும்)

கட்டுரையாளர் : மகப்பேறு மருத்துவர், சமூக ஆர்வலர்.

தொடர்புக்கு: savidhasasi@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in