Published : 19 Jun 2023 05:11 AM
Last Updated : 19 Jun 2023 05:11 AM

ப்ரீமியம்
வெள்ளித்திரை வகுப்பறை - 1 புதிய தொடர் | மனித இனத்தின் மகத்தான கண்டுபிடிப்பு

கட்டிடங்கள், உடைகள், வாகனங்கள் போன்ற பெரும்பாலானவை புதிய புதிய வடிவங்களில் மாறிக் கொண்டே இருக்கின்றன. தொழில்நுட்பம் தினம்தோறும் புதுமையாகிறது. செயற்கை நுண்ணறிவு மனிதருக்கு பதிலி ஆகி விடுமோ என்ற கவலை பேச்சுகள் பரவலாகி வருகின்றன. நூற்றாண்டுகளைக் கடந்து வடிவம் மாறாமல் இருக்கும் சிலவற்றுள் முக்கியமானது பள்ளி. அந்த அமைப்பின் இறுக்கமும் பெரிதாக தளர்ந்து விடவில்லை. சிறைச்சாலையைப் போன்ற வடிவமும் நடைமுறைகளும் கொண்டது பள்ளி என்பது பலரின் கூற்று. யார் என்ன சொன்னாலும் மனித இனத்தின் மகத்தான கண்டுபிடிப்பு பள்ளி.

சமூகத்தின் அழுத்தங்கள் இல்லாமல் குழந்தைகள் எதிர்காலத்திற்காகக் கற்கும் தனித்த இடமாக பள்ளி இருக்கிறது. கற்றல்என்பது பள்ளிக்குள் மட்டுமா நிகழ்கிறது? பள்ளிக்கு வெளியே வீட்டில், சமூகத்தில் என எங்கும் அது நிகழ்ந்து கொண்டேதான் இருக்கிறது. பிறகு ஏன் பள்ளிக்குச் செல்லவேண்டும்? வாழ்வதற்குத் தேவையான பணத்தைச் சம்பாதிப்பதற்குத் தனக்கானவழிகளைக் கற்றல். தனது திறன்களை அறிந்து கொள்ளுதல். வாழ்வியல் திறன்களை வளர்த்தல். பிறரோடு கலந்துரையாடிச் சிந்திக்கும் திறனை வளர்த்தல் போன்ற செயல்பாடுகளின் களமே பள்ளி.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x