உலகம் - நாளை - நாம் - 16: அனைவரையும் ஈர்க்கும் அமெரிக்கா!

உலகம் - நாளை - நாம் - 16: அனைவரையும் ஈர்க்கும் அமெரிக்கா!
Updated on
2 min read

என்ன கோடை விடுமுறையில மகிழ்ச்சியா இருந்தீங்களா?

ஆமாம்… நிறைய விளையாடினோம். நல்லா ஊர் சுத்தினோம்.

உங்க ஊருக்குள்ளேயே சுற்றுனீங்களா அல்லது ஊர்ஊரா சுற்றுனீங்களா?

எங்க ஊருக்குள்ளேயே சுத்தி வந்தேன்.

நான் வெளியூருக்கு சுற்றுலா போயிட்டு வந்தேன்.

அடுத்த வருஷம் வெளிநாட்டுக்கு அழைச்சிக்கிட்டுப் போறேன்னு எங்கப்பா சொன்னாரு.

பரவாயில்லையே போயிட்டு வாங்க. எந்த நாட்டுக்குப் போறீங்க?

அதெல்லாம் தெரியலை. ஆனா போறோம்.

நல்லது. வெளி நாட்டுக்குப் போறதுக்கு முன்னால ஒவ்வொரு நாட்டைப் பற்றியும் கொஞ்சம் தெரிஞ்சுக்கலாமா? யாருக்கெல்லாம் ஆசையா இருக்கு?

அட... எல்லாருமே கை தூக்கி இருக்கீங்க! சரி. எந்த நாட்டுல இருந்து தொடங்கலாம்?

அமெரிக்கா...ஜப்பான்...லண்டன்...லண்டன்? அது எப்போ நாடு ஆச்சு?

லண்டன் இல்லை…இங்கிலாந்து. ஆமாம். லண்டன் - இங்கிலாந்து நாட்டின் தலைநகரம். சரி, அமெரிக்காவுல இருந்தே தொடங்கலாம். எங்கே சொல்லுங்க இப்போ அமெரிக்க அதிபரா இருக்குறது யாரு?

ட்ரம்ப்

டொனால்ட் ட்ரம்ப்

ட்ரம்பா? எங்கே இருக்கீங்க? அவருக்கு அப்புறம் ஜோ பைடன் வந்துட்டாரு. பரவாயில்லை. ட்ரம்ப் பேரு அந்த அளவுக்கு நல்லா பதிஞ்சு போய் இருக்கு. நமக்கு இது அத்தனை முக்கியம் இல்லை. ஏன்னா நாம் இங்கே, அரசியல் பார்க்கப் போறது இல்லை. நமக்கு வேண்டியது என்ன?

பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி
பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி

மேலை நாடுன்னா என்ன?

புவியியல் சுற்றுச்சூழல். சரியா சொன்னீங்க. நல்லா தெளிவா இருக்கீங்க. அப்படித்தான் இருக்கணும். சரியா? நம்மைப் பொறுத்த மட்டும் அமெரிக்கா – ஒரு மேலை நாடு. இதுக்கு என்ன அர்த்தம். மேலை நாடுன்னா என்ன? நம்மை விட வளர்ந்த நாடு? அதுதான் இல்லை. மேற்கு திசையில் இருக்கிற நாடு – மேலை நாடு. கிழக்கே இருந்தா கீழை நாடுன்னு சொல்லுவோம். ஐரோப்பா, அமெரிக்கா, மேற்கே இருக்கு. சீனா, ஜப்பான், சிங்கப்பூர், தாய்லாந்து இதெல்லாம் கிழக்கே இருக்கு. இதையே சில பேரு ‘ஓரியண்டல்’ நாடுகள்னும் சொல்லுவாங்க.

திசையை வச்சு நாடுகளை சொல்றோம் இல்லையா? இதே அடிப்படையில, சிந்தனைகள் அடையாளப்படுத்தப்படுது. ‘மேற்கத்திய சிந்தனைகள்’ ‘ஓரியண்டல் தத்துவங்கள்’, இதுக்கெல்லாம் என்ன அர்த்தம்? இந்தத் திசையில் உள்ள நாடுகளை சேர்ந்த சிந்தனைகள் அல்லது தத்துவங்கள். புரிஞ்சுதா?

இதேபோல நாகரிகம், பழக்க வழக்கம் கூட சொல்லுவாங்க இல்லை? அபாரம் பூங்கொடி. நல்ல கேள்வி கேட்டீங்க. மேற்கத்திய நாகரிகம், மேற்கத்திய பழக்க வழக்கங்கள் அப்படின்னு நாம சொல்றது உண்டு. இது என்னன்னு நீங்களே ஒருத்தரை ஒருத்தர் கேட்டுத் தெரிஞ்சுக்குங்க. அடுத்த அம்சத்துக்குப் போவோம்.

பொதுவா கீழை நாடுகளை விட மேலை நாடுகள் மீதுதான் நமக்கு விருப்பம் அதிகமா இருக்கு. சுற்றுலா போகணுமா, வேலைக்குப் போய் வாழ்க்கையை அமைச்சுக்கணுமா இங்கிலாந்து ஜெர்மனி ஃப்ரான்ஸ் இத்தாலி கனடா அமெரிக்கானு மட்டும்தான் யோசிக்கிறாங்க. பொதுவா, கீழை நாடுகளை விட அதிகமா, மேலை நாடுகளை நம் மக்கள் விரும்பறதுக்கு என்ன காரணம்?

அவை எல்லாம் வளர்ந்த நாடுகளா இருக்கு. அங்கே இருக்குற நாகரிகம், ஃபேஷன் பிடிச்சு இருக்கு. அங்கே வெயில் அவ்வளவா இருக்காது. எப்பவுமே குளிர்ச்சியா இருக்கும்.

அங்கேயும் வெயிலா?

நல்லா சொன்னீங்க. ஒரு வகையிலே இது எல்லாமே சரியான காரணம்தான். ஆனா, கவனிச்சீங்களா? இப்பல்லாம் ஐரோப்பிய நாடுகளிலேயும் வெயில் அதிகமா இருக்கு.

அப்படியா அங்கெல்லாம் கூட வெயில் அடிக்குமா?

ஆச்சரியமா இருக்கு இல்லை? உண்மையில், அங்கே இருக்குற அந்த நாட்டு மக்களே நம்ப முடியாம அதிர்ச்சியா பார்க்குறாங்க. 2022-ம் ஆண்டு ஜூன், ஜூலை மாதங்கள்ல, பிரான்சுல வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு கிட்டத்தட்ட 46 டிகிரி செல்சியஸ் அதாவது சுமார் 155 டிகிரி ஃபார்ன்ஹீட் அளவுக்கு வெயில் சுட்டு எரிச்சுது.

ஸ்பெய்ன், ஜெர்மனி, போலந்து, இத்தாலியின் சிசிலித் தீவு இங்கெல்லாமும் கடந்த ஓரிரு ஆண்டுகளாகவே கடுமையான வெயில் போட்டுத் தாக்குது. இது பற்றி நாம் விரிவாகத் தெரிஞ்சுக்கலாம். ‘எல் நினோ’ பாதிப்பு, ஒஸோன் படலத்தில் சிதைவு பற்றி எல்லாம் கூட விளக்கமா பார்க்கத்தான் போறோம். இருக்கட்டும்.

இந்தியாவில் உள்ள மாநிலங்கள் பற்றி பார்த்தோம் இல்லையா? அதே போல உலக நாடுகள் சிலவற்றைப் பற்றியும் பார்த்துடலாம். இதுக்கு அடுத்ததா சர்வதேச சுற்றுச்சூழல் பற்றி ஆழமாகப் பார்க்கலாம். சரியா?

முதல்ல. ‘அமெரிக்கா’!

இந்த வாரக் கேள்வி:

ஐரோப்பா கண்டத்தில், அவர்களுடைய கோடை காலத்திலும், குளிர்ச்சியாக இருக்கக் கூடிய இடங்கள் யாவை..?

(பயணிப்போம்)

கட்டுரையாளர், கல்வி, வேலைவாய்ப்பு போட்டித்தேர்வுக்கான

வழிகாட்டி

தொடர்புக்கு: bbhaaskaran@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in