

நவீன தொழில்நுட்பம் என்பது கணிதம், விஞ்ஞானம், பொறியியல், மென்பொருள் ஆகியவற்றின் கலவையாகும். இதற்கு தேவையான அடிப்படை அறிவு கூட்டல், கழித்தல், பெருக்கல் மற்றும் வகுத்தல் என்று கடந்த வாரமே பார்த்தோம்.
மேலும் துறை சார்ந்த அறிவு (Domain Knowledge) மிகவும் முக்கியம். அதற்கு பிறகு தேவையானது பயிற்சி, பயிற்சி, பயிற்சி. நவீன தொழில்நுட்பம் என்பது மனப்பாடம் செய்யும் அறிவு அல்ல, அது திறமை சார்ந்தது. ஒரு சிறிய செயலை பலமுறை செய்து பார்த்தால் திறமை தானாக வளரும். இது கார் ஓட்டுவது, படம் வரைவது, பாட்டு பாடுவது போன்றது.
இதை ஏன் இங்கே குறிப்பிடுகிறோம் என்றால் நமது கல்வித் திட்டம் மனப்பாடம் செய்யும் முறையை மாணவர்களிடம் ஊக்குவிக்கிறது.
ஆனால் மனப்பாடத்தை நம்பாமல் பயிற்சியை நம்பினால் மட்டுமே நவீன தொழில்நுட்பத்தை புரிந்து கொள்ள முடியும். அதற்கு தொடக்கமாக தினமும் ஒரு சிறிய பயிற்சியை மேற்கொள்ளுங்கள்.
உங்களுக்கு தெரிந்த சிறிய கணித செயல்பாடுகளை ஒரு தாளில் எழுதுங்கள். பிறகு நீங்கள் எழுதியதை நீங்களே செய்து பாருங்கள். இரண்டு இரட்டை இலக்க எண்களைக் கூட்டுகிறோம் எனில் அதனை எவ்வாறு எழுதுவது என்று பார்க்கலாம்.
இரட்டை இலக்க எண்ணில் ஒற்றை இட எண் மற்றும் பத்தாம் இட எண் என்று இரண்டு எண்கள் இருக்கும். “45” என்ற எண்ணில் ஒற்றை இட எண் “5” மற்றும் பத்தாம் இட எண் 4.
இதே போல் இரண்டு எண்களிலும் இருக்கும். உதாரணமாக முதல் எண்ணில் உள்ள இரண்டு இலக்கங்களை “Number 1, ஒற்றை இலக்க எண், Number 1 இரண்டாம் இலக்க எண்”, “Number 2 ஒற்றை இலக்க எண், “Number 2 இரட்டை இலக்க எண்”. இது குழப்பமாக இருப்பதால், இதனை சுருக்கி எழுதலாம். N1D1, N1D2, N2D1, N2D2.
N1D1 - எண் 1 இலக்கம்
N1D2- எண் 1 இலக்கம் 2
N2D1 - எண் 2 இலக்கம் 1
N2D2- எண் 2 இலக்கம் 2
இப்பொழுது இரண்டு எண்களையும் கூட்டல் செய்தால் வரும் விடையை எண் 3-ல் சேமிக்கலாம்.
N3D1 - எண் 3 இலக்கம் 1
N3D2 - எண் 3 இலக்கம் 2
N3D3 - எண் 3 இலக்கம் 3
இதையே ஒரு உதாரணத்தின் மூலம் பார்க்கலாம்.
86 49 = 135
எண் 1 – 86
எண் 2 – 49
எண் 3 – 135
இதனை கீழ்க்கண்டவாறு குறிப்பிடுவோம்
எண் 1 - Number 1 - N1 - 86
எண் 2 - Number 2 - N2 - 49
எண் 3 - Number 3 - N3 – 135
எண் 1 இலக்கம் 1 - Number 1 Digit 1 - N1D1 - 6
எண் 1 இலக்கம் 2 - Number 1 Digit 2 - N1D2 - 8
எண் 2 இலக்கம் 1 - Number 2 Digit 3 - N2D1 - 9
எண் 2 இலக்கம் 2 - Number 2 Digit 2 - N2D2 - 4
எண் 3 இலக்கம் 1 - Number 3 Digit 1 - N3D1 - 5
எண் 3 இலக்கம் 2 - Number 3 Digit 2 - N3D2 - 3
எண் 3 இலக்கம் 3 - Number 3 Digit 3 - N3D3 - 1
இதை புரிந்து கொண்டு ஒரு இரட்டை இலக்க எண்ணை எவ்வாறு கூட்டுவது என்று எழுதிப்பாருங்கள். இதுதான் நவீன தொழில்நுட்பத்தின் அடிப்படை.
தொடர்ந்து டிஜிட்டல் மொழி பேசுவோம்
கட்டுரையாளர்: பொறியாளர், தொழில்நுட்ப பயிற்றுநர்