அறிவியல்ஸ்கோப் - 1: சோதனை வென்றால் சாதனை படைக்கலாம்!

அறிவியல்ஸ்கோப் - 1: சோதனை வென்றால் சாதனை படைக்கலாம்!
Updated on
2 min read

ஒரு கிராமத்தில் ஒரு விவசாயி வசித்தார். அடிப்படையில் அவர் ஒரு சோம்பேறி. இதனால் அவரது மனைவி அவரை ஏதாவது சொல்லிக்கொண்டேயிருப்பார்.

ஒருநாள் அவரது மனைவியின் நச்சரிப்பிலிருந்து தப்பிக்க தனது நாயுடன் மலைப்பாங்கான பகுதிக்குச் சென்றார். அங்கே சிலர் மது அருந்திக் கொண்டிருப்பதை கண்டு இவரும் அவர்களுடன் சேர்ந்து மது அருந்திவிட்டார். பின்னர் தன்னை மறந்து தூங்கி விட்டார்.

மீண்டும் துயிலெழும்போது அவருடையதாடி சுமார் ஒரு அடிநீளத்திற்கு வளர்ந்திருந்தது. அவர் தூங்கியது ஓரிரவு அல்ல 20 ஆண்டுகள். அந்த வித்தியாசமான மதுஅவருக்கு 20 ஆண்டு காலம் உறக்கத்தைத் தந்துவிட்டது. அவருடைய நாயையும் காணவில்லை. பின்னர் ஒருவாறு சமாளித்துக்கொண்டு தனது ஊரை அடைந்தபோது ஒருவருக்கும் இவரை அடையாளம் தெரியவில்லை. ஒரு வயதான பெண்மணி இவரை அறிந்துகொண்டார். அவரது பெயர் ரிப் வேன் விங்கிள்.

பின்னர் இவருடைய பெயருடைய ஒரு வாலிபனை கண்டார். அந்த இளைஞர் தனது மகன் என்றும் அறிந்துகொண்டார். தனது மனைவி இறந்துவிட்டதையும் அறிகிறார். எதுவும் அவருக்கு கலக்கத்தை ஏற்படுத்தவில்லை. ’ரிப்வேன் விங்கிள்’ என்ற இந்த கதையை 1819-ல் எழுதியவர் அமெரிக்க எழுத்தாளர் வாஷிங்டன் இர்விங். அருமையான கதை... ஆமாம் இந்த சிறுகதைச் சுருக்கம் ஏன்?

கணினி தந்தைக்கே தலை சுற்றும் வளர்ச்சி!

கணினியின் தந்தை என்று அழைக்கப்படும் சார்லஸ் பாபேஜ் இன்றைக்கிருக்கும் கணினியை பார்த்தால் ரிப்வேன் விங்கிள் அவர்களது நிலைமையே ஏற்படும்.

ஆச்சரியத்தில் அவர் மயக்கம் போட்டே விழுந்துவிடுவார். ஓர் அறை முழுவதும் பரவியிருந்த அவருடைய கணினி எங்கே இன்று கையடக்கமாயிருக்கும் கணினி எங்கே? அவருடைய காலத்தில் மின்னணுவியல் தொழில்நுட்பம் வளராத காரணத்தால் அவரால் பெரிதும் சாதிக்க முடியவில்லை.

ஆனால், அவர் இன்றைக்கிருக்கும் கணினியில் உள்ள அனைத்தும் சாத்தியம் என்று சொல்லிவிட்டு மறைந்தார். நமது காலத்திலேயே ஆரம்பக்காலங்களில் பயன்படுத்தப்பட்ட கைபேசிகள் செங்கல் போல இருந்ததையும் பின்னர் கைக்கடக்கமானதையும் இப்போதே நாமே அதில் அடக்கமாகும் ஆண்ட்ராய்டையும் நம் காலம் சந்திக்கும் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிகள்.

அறிவியலாளர்களில் பலரும் அவர்களது வாழ்நாட்களுக்குள்ளாகவே அவர்களது கனவுகளை அடைய முடிவதில்லை. ஆனால், அவர்களின் காலத்தில் இருக்கும் வாய்ப்புள்ள கருவிகளுக்கேற்ப அவர்களது கற்பனைகளையும் தரவுகளையும் பதிவு செய்கின்றனர். பட்டாணிச் செடிகளைப் பயன்படுத்தி கிரிகோர் மெண்டல் செய்த பரிசோதனை முடிவுகள் மரபியலின் அடிப்படைகளை அவர் காலத்திலேயே நிரூபித்திருந்தன.

ஆனால், மரபணுவின் வரைபடம் வரைந்து சாதித்த வாட்சன்மற்றும் கிர்ரிக் அவர்களின் காலத்தில்வெளிச்சத்துக்கு வந்த பல விஷயங்களையும் கிரிகோர் மெண்டல் அவர்களே கண்டுபிடித்திருந்தது பலரையும் ஆச்சரியப்படுத்தியது.

அந்த அளவுக்கு அறிவியலாளர்கள் ஒருவருக்கொருவர் உடனுக்குடன் கருத்துப் பகிர்வுகளை மேற்கொள்வது அவசியமானதாகிறது. இன்றைக்கிருக்கும் பல வாய்ப்புகள் வசதியில்லாத காலங்களில் ராயல் சொசைட்டிபோன்ற நிறுவனங்களும் இதழ்களுமே அவற்றைப் பதிவு செய்ய உதவின.

கோடியில் ஒருவர்!

எந்த ஒரு சாதனையாளரும் சந்திக்கும் எள்ளல், எதிர்ப்பு, ஏற்றுக்கொள்ளல் என்ற படிநிலைகளை அறிவியலாளர்களும் சந்திக்க வேண்டியதாகவே இருந்தது. எனவே அவர்களில் பலரும் பயந்தனர்.மேரி கியூரியின் கூற்றைக் கவனிப்போம். “வாழ்க்கையில் எதற்கும் பயப்படவேண்டியதில்லை.

நான் புரிந்துகொள்ள வேண்டியதுதான் உள்ளது. தற்போது பவற்றையும் புரிந்துகொள்ளும் நேரம் ஆகவேகுறைவாகவே பயப்படலாம்” என்றார். உலகில் வாழ்ந்து மடிந்த பல கோடி நபர்களில் ஒரு சிலரையே காலம் பதிவு செய்கிறது.

நியூட்டன் அவர்கள் “என்னால் ஓரளவுக்குத் துல்லியமாக யோசிக்க இயல்கிறது என்று சொன்னால் அதற்குக் காரணம் நான் எனது முன்னோர்களின் தோள்களின் மீது அமர்ந்துகொண்டு பார்க்கிறேன்” என்றாராம். வாருங்கள் அவருக்குக்கிடைத்த தோள்கள் நமக்கும் கிடைக்கட்டும்.

கட்டுரையாளர்: பள்ளி தலைமையாசிரியர், தமிழ்நாடு அறிவியல் இயக்கம்.

தொடர்புக்கு: thulirmadhavan@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in