உள்ளாட்சி தேர்தல் எதிரொலி: அரசு கணினி சான்றிதழ் தேர்வு ஜனவரி மாதத்துக்கு தள்ளிவைப்பு: தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவிப்பு

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

இம்மாதம் கடைசி வாரத்தில் நடத் தப்படுவதாக இருந்த அரசு கணினி சான்றிதழ் தேர்வுகள், உள்ளாட்சி தேர்தல் காரணமாக ஜனவரி மாதத்துக்கு தள்ளி வைக் கப்பட்டுள்ளதாக தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

அரசு கணினி சான்றிதழ் தேர்வு (Certificate course in Computer on Office Automation-COA) தொழில்நுட்ப கல்வி இயக் ககம் சார்பில் ஆண்டுக்கு 2 முறை (ஜூன், டிசம்பர்) நடத்தப்படுகிறது.

தட்டச்சர் பணிகளுக்கு...

அரசு பணியில் இளநிலை உதவி யாளர், தட்டச்சர் பணிகளுக்கு அரசு கணினி சான்றிதழ் தேர்வு தேர்ச்சி கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. எஸ்எஸ்எல்சி கல்வித்தகுதியுடன் தட்டச்சு தேர்வில் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் கீழ்நிலை (லோயர் கிரேடு) தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் இந்த தேர்வை எழுதலாம்.

நடப்பு ஆண்டின் டிசம்பர் பருவத்துக்குரிய தேர்வுகள் வரும் 28 (தியரி), 29 (செய்முறை) ஆகிய தேதிகளில் நடத்தப்படும் என முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், உள்ளாட்சி தேர்தல் காரணமாக, அரசு கணினி சான்றிதழ் தேர்வுகள் ஜனவரி மாதத் துக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளன.

செயல்முறை தேர்வு

இதுதொடர்பாக மாநில தொழில்நுட்பக் கல்வி இயக்கு நரும், தொழில்நுட்பத் தேர்வுகள் வாரியத்தின் தலை வருமான விவேகானந்தன் வெளியிட்ட அறிவிப்பில் கூறி யிருப்பதாவது:-

டிசம்பர் மாதத்தில் நடைபெறுவ தாக இருந்த கணினி சான்றிதழ் தேர்வுகள் உள்ளாட்சி தேர்தல் காரணமாக ஜனவரிக்கு தள்ளி வைக்கப்படுகின்றன. அதன்படி, தியரி தேர்வு ஜனவரி 4-ம் தேதியும் (சனி காலை 10.30 முதல் மதியம் 12.30 வரை), செய்முறைத்தேர்வு 5 மற்றும் 6-ம் தேதியும் (ஞாயிறு, திங்கள்) நடைபெறும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in