Published : 26 Nov 2019 09:36 AM
Last Updated : 26 Nov 2019 09:36 AM

சுனாமி, பூகம்பங்களை துல்லியமாக அறியலாம்: அமெரிக்க விஞ்ஞானிகள் கருவி கண்டுபிடிப்பு

வாஷிங்டன்

நிலம் மற்றும் கடலுக்கு அடியில் ஏற்படும் சிறிய அதிர்வுகளைக்கூட துல்லியமாக கண்டறியும் வகையில் உயர்தர கருவியைஅமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

நில அதிர்வை துல்லியமாக கண்டுபிடிக்கும் கருவி தயாரிக்கும் பணியில் அமெரிக்காவில் உள்ள தெற்கு புளோரிடா பல்கலைக்கழகத்தின் (யூஎஸ்எஃப்) ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில், கடல் மற்றும் நிலத்தில் ஏற்படும் மாற்றம் குறித்து கண்டுபிடிக்கும் மிதவை கருவியுடன், அதிநவீன ஜிபிஎஸைஇணைத்து ‘ The patent-pending seafloor geodesy system’ என்ற கருவியை உருவாக்கியுள்ளனர்.

இதுகுறித்து யூஎஸ்எஃப் பேராசிரியர் டிம் டிக்சன் கூறுகையில், “இந்த கருவியானது, நிலம் மற்றும் கடலில் ஏற்படும் சிறிய மாற்றம் மற்றும் அதிர்வைக்கூட மிக துல்லியமாக கண்டுபிடித்துவிடும்.

இந்த கருவியில் பொருத்தப்பட்டுள்ள டிஜிட்டல் திசைக்காட்டி மூலம் எல்லா திசையையும் கண்காணிக்கலாம். கடலோரகண்காணிப்புக்கு தற்போது பல தொழில்நுட்பங்கள் இருந்தாலும், சத்தம் எதும் இல்லாமல் மிக அமைதியாக இருக்கும் கடலின் ஆழத்தில் இந்த தொழில்நுட்பம் சிறப்பாக செயல்படுகிறது.கடலில் ஏற்படும் சின்ன சத்தம் முதற்கொண்டு கண்காணிக்கப்படும்போது, பூகம்பம், சுனாமிபோன்றவற்றை முன்க்கூட்டியே துல்லியமாக அறியலாம். இதன்மூலம், கடலில் ஆழத்தில் ஏற்படும் சின்ன சத்தம் மற்றும் அதிர்வை கண்டுபிடிக்க முடியும். அதேபோல், ஒன்று முதல் இரண்டு சென்டிமீட்டர் வரை சிறிய அளவிலான இயக்கங்களைக் கூட இந்த கருவி கண்டறியும். ‘ நெருப்பு வளையம்’ என்று அழைக்கப்படும் பசிபிக் பெருங்கடல் பகுதிகளைக் கண்காணிக்க இந்த கருவி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x