புதுச்சேரி | பள்ளிக் குழந்தைகளுக்கு தொடுசிகிச்சை: பிரான்ஸ் சிகிச்சை நிபுணர்கள் அளித்தனர்

புதுச்சேரியில் பள்ளிக் குழந்தைகளுக்கு தொடுசிகிச்சை அளிக்கும் பிரான்ஸ் சிகிச்சை நிபுணர்கள்.
புதுச்சேரியில் பள்ளிக் குழந்தைகளுக்கு தொடுசிகிச்சை அளிக்கும் பிரான்ஸ் சிகிச்சை நிபுணர்கள்.
Updated on
1 min read

புதுச்சேரி: புதுச்சேரியில் பள்ளிக் குழந்தைகளுக்கு தொடுசிகிச்சையை பிரான்ஸ் சிகிச்சை நிபுணர்கள் அளித்தனர். புதுச்சேரியில் சக்தி விகார் கல்வி மையம் இயங்கி வருகிறது. அதன் சார்பில் பூந்தளிர் முன் மழலையர் பள்ளியும் செயல்படுகிறது.

அப்பள்ளிக் குழந்தைகளுக்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆஸ்டியோபதி எனப்படும் விரல்களால் வலி மிகுந்த இடங்களில் தொட்டு சிகிச்சை அளிக்கப்படும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. புதுச்சேரி உப்பளம் பகுதியில் உள்ள ஓலாந்திரே எனும் சமூக நல அமைப்புசார்பில் இந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது.

அந்த வகையில், பிரான்ஸ் நாட்டிலிருந்து வந்த சான்டீன், அலீஸ் உள்ளிட்ட 6 பேர் கொண்ட ஆஸ்டியோபதி சிகிச்சை நிபுணர் குழுவினர் புதன்கிழமை பள்ளிக் குழந்தைகளுக்கு தொடு முறையில் சிகிச்சை அளித்தனர்.

தலைவலி, வயிற்றுவலி, முதுகுவலி மற்றும் காது, மூக்கு, தொண்டை வலிஉள்ளிட்ட பாதிப்புக்கும் தொடுதல் முறையில் சிகிச்சை அளித்து குணப்படுத்தியிருப்பதாகவும் பிரான்ஸ் நாட்டு சிகிச்சை நிபுணர்கள் தெரிவித்தனர்.

அவர்கள் மேலும் கூறுகையில், "ஆஸ்டியோபதி மூலம் முழு உடலையும் சம நிலைப்படுத்த முடியும். இந்த சிகிச்சை மூலம் வலி அதிகம் உள்ள உடலின் பகுதிகளுக்கு சிகிச்சை கொடுத்து மீண்டும் அப்பகுதிகள் சரியாக இயங்கவும் உயிர் பெறவும் செய்யப்படுகிறது. மனிதனுக்கு அவனது உறுப்புகளின் முறையான இயக்கமே 'சரியான வாழ்க்கை ஆகும்.

நன்றாக உடல் இயங்கினால் தான் சீரான ரத்த ஓட்டமும் உடல் ஆரோக்கியமாகவும் இருக்கும். அந்த வகையில் குழந்தைகளின் வலிகள் உள்ள பகுதிகளை கண்டறிந்து அதற்கேற்ப சிகிச்சை அளிக்கப்படுகிறது." என்று குறிப்பிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in