

கோவை: பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்கும் வகையில், கோவை மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் பால் பாயிண்ட் பேனா பயன் படுத்த தடைவிதிக்கப்பட்டு, மை பேனா பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கோவை மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் பிளாஸ்டிக் கழிவை தவிர்க்கும் வகையில் 4 முதல் 8-ம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களுக்கும் மை பேனாக்கள் வழங்கப்பட்டன. பள்ளி ஆசிரியர்களும், மாணவர்களும் இனிமேல் பள்ளி வளாகத்தில் மட்டுமல்லாது எல்லா இடத்திலும் பால்பாயிண்ட் பேனாக்களை பயன்படுத்துவதை தவிர்ப்போம் என உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு: இந்நிகழ்ச்ியில் வால்பாறை நகராட்சிஆணையர் பாலு தலைமை வகித்து பேசும்போது, “பால்பாயிண்ட் பேனாக்களுக்கு பதிலாக மை பேனாக்களை பயன்படுத்துவது சுற்றுச்சூழலை காப்பதற் கான முதல் படி” என்றார்.
பொள்ளாச்சி ஸ்ரீ தாய் மூகாம்பிகை எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் கோபிகிருஷ்ணன் மாணவர்களுக்கு மை பேனாக்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியை மைதிலி மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.