

பாவூர்சத்திரம் அருகே உள்ள திப்பணம்பட்டியைச் சேர்ந்த ஆராதனா என்ற சிறுமி வினைதீர்த்த நாடார்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு கூடுதல் கட்டிடம் கேட்டு தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதியிருந்தார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு தென்காசியில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் மாணவி ஆராதனா கடிதம் எழுதியதை சுட்டிக்காட்டி பேசியதுடன் விழா மேடையிலேயே அந்த பள்ளிக்கு 2 கூடுதல் கட்டிடங்கள் கட்ட ரூ.35.5 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவித்தார்.
பள்ளிக்கு கட்டிடம் கட்டுவதற்காக முதல்வருக்கு கடிதம் எழுதிய மாணவி ஆராதனாவுக்கு ஏராளமானோர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தென்காசி மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் மாணவி ஆராதனாவை தொலைபேசியில் அழைத்து பேசி பாராட்டு தெரிவித்து நன்றாக படிக்குமாறு அறிவுரை கூறினார்.