காவல்துறையின் செயல்பாடுகளை நேரில் அறிந்த மாணவிகள்

கோவை காளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு துப்பாக்கியை கையாள்வது குறித்து விளக்கம் அளிக்கும் கோவை சரக டிஐஜி எம்.எஸ்.முத்துசாமி, அருகில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உள்ளார்.
கோவை காளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு துப்பாக்கியை கையாள்வது குறித்து விளக்கம் அளிக்கும் கோவை சரக டிஐஜி எம்.எஸ்.முத்துசாமி, அருகில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உள்ளார்.
Updated on
1 min read

கோவை: கோவையில் ‘காவலர்களுடன் ஒருநாள்’ நிகழ்ச்சி மூலம் அரசு மேல்நி்லைப் பள்ளி மாணவிகள் காவல்துறையின் செயல்பாடுகளை நேரில் அறிந்துகொண்டனர்.

கோவை மாவட்ட காவல்துறையின் சார்பில், பாலியல் தொந்தரவுகளை தடுப்பது தொடர்பாக ‘ப்ராஜெக்ட் பள்ளிக்கூடம்’ என்ற திட்டத்தின் கீழ் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக ‘காவலர்களுடன் ஒருநாள்’ என்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு காளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் 30 மாணவிகள் வந்தனர்.

கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு கோவை சரக டிஐஜி எம்.எஸ்.முத்துசாமி தலைமை வகித்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் முன்னிலைவகித்தார். காவல்துறையினரின் செயல்பாடுகள் குறித்து மாணவி களுக்கு விளக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, காவலர் பயிற்சிப் பள்ளி வளாகத்தில் உயிரிழந்த காவலர்களுக்கான நினைவுத்தூண், ஆயுதக்கிடங்கில் காவலர்கள் பயன்படுத்தும் வெவ்வேறு வகையான துப்பாக்கிகள், பாதுகாப்பு உபகரணங் களை மாணவிகள் பார்வையிட்டனர். மேலும், அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என காவலர்கள் செய்துகாட்டி விளக்கினர்.

இதுதொடர்பாக, காவல்துறை அதி காரிகள் கூறும்போது,‘‘மாணவிகளை மனதளவில் வலுப்படுத்தி பாலியல்குற்றங்கள் இல்லாத மாவட்டமாக கோவை மாவட்டத்தை உருவாக்கு வதே இந்நிகழ்ச்சியின் தலையாக நோக்கம்’’ என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in