Published : 15 Sep 2022 06:25 AM
Last Updated : 15 Sep 2022 06:25 AM

ராசிபுரம் பள்ளி நீட் தேர்வு மையத்தில் 74 மாணவர்கள் 500-க்கு மேல் பெற்று சாதனை

"நீட்" நுழைவுத்தேர்வில் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் ராசிபுரம் எஸ்ஆர்வி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கேக் வெட்டி கொண்டாடினர்.

நாமக்கல்: ராசிபுரம் எஸ்ஆர்வி ஆண்கள் பள்ளி நீட் தேர்வு மையத்தில் 74 மாணவர்கள் 500 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம்எஸ்ஆர்வி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியும் பிஎஸ்ஆர் ஸபினாக்கல் கிளாசஸ் பயிற்சி நிறுவனமும் இணைந்து நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுக்கு பயிற்சியளித்து வருகின்றன.

இம்மையத்தில் 350 மாணவ, மாணவிகள் நீட் தேர்வுக்கு பயிற்சி எடுத்து வந்தனர். அவர்களில் ஆர்.பாலாஜி, ஹேமாவதி ஆகியோர் நீட் தேர்வில் 720-க்கு 642 மதிப்பெண் பிடித்து தேர்ச்சி பெற்றனர்.

இதேபோல், 600 மதிப்பெண்களுக்கு மேல் 9 பேரும், 530 மதிப்பெண்களுக்கு மேல் 48 பேரும், 500-க்கு மேல் 74 பேரும் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்நிலையில், ராசிபுரம் எஸ்ஆர்வி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மையத்தில் படித்து நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கும், அவர்களுக்குப் பயிற்சியளித்த ஆசிரியர்களுக்கும் பள்ளி வளாகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு எஸ்ஆர்வி ஆண்கள் பள்ளிக் குழுமத்தின் இயக்குனர்கள் பி.சுவாமிநாதன், எஸ்.செல்வராஜன், ஏ.ராமசாமி, எம்.குமரவேல், ஏ.ஆர்.துரைசாமி, பி.சத்தியமூர்த்தி, பிஎஸ்ஆர்பினாக்கல் நீட் பயிற்சி மையத்தின் இயக்குனர் சாய்ராம், பள்ளி தலைமை ஆசிரியர் செந்தில், உயிரியல் ஆசிரியர் கௌரிநாத் ஆகியோர் பாராட்டிப் பேசினர். மாணவ, மாணவிகள் தங்கள் வெற்றியை கேக் வெட்டி கொண்டாடினர்.

அதிக மதிப்பெண் பெற்று நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் கூறும்போது, "நீட் தேர்வு என்பதுமிகவும் எளிமையான தேர்வு.அதில்முழு கவனம் செலுத்தி நாம் நன்றாக படித்தால் அனைத்து துறைகளிலும் வெற்றி பெற முடியும். மேலும்மருத்துவராகவும், சிறந்த ஆராய்ச்சியாளராகவும் வருவதற்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. எனவே, அதை நாம் விரும்பி படித்து ஆசிரியர்கள் நடத்தும் போது அதை கவனம் செலுத்தி ஈடுபாட்டுடன் செயல்பட்டால் கண்டிப்பாக அதிக மதிப்பெண் பெற்று வெற்றி பெறலாம்" என்றனர்.

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x