தஞ்சாவூர் | அரசு பள்ளி ஆசிரியைக்கு நல்லாசிரியர் விருது

நல்லாசிரியர் விருதுபெற்ற ஆசிரியை சத்யாவை தஞ்சாவூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி  சிவகுமார் பாராட்டினார்.
நல்லாசிரியர் விருதுபெற்ற ஆசிரியை சத்யாவை தஞ்சாவூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சிவகுமார் பாராட்டினார்.
Updated on
1 min read

தஞ்சாவூர்: சென்னையில் செப்டம்பர் 5-ம் தேதி நடைபெற்ற ஆசிரியர் தினவிழாவில் 393 பேருக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருதுகளை பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழங்கினார்.

நல்லாசிரியர் விருது பெற்ற 393 பேரில் தஞ்சாவூர் பட்டுக்கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி அறிவியல் பட்டதாரி ஆசிரியை சத்யாவும் ஒருவர்.

கற்றல் - கற்பித்தலில் புதுமையை புகுத்தி எளிமைப்படுத்தியதற்காகவும், பள்ளி மாணவர்களுக்கு தொடர்ந்து ராக்கெட் அறிவியல் பயிற்சி மற்றும் செயற்கைக்கோள் ஏவுகணை பயிற்சிபோன்றவற்றை இஸ்ரோ - பெங்களூர் ஸ்ரீஹரிகோட்டா போன்ற வெளியிடங்களுக்கு மாணவர்களை அழைத்துச் செல்வதற்காகவும் அறிவியல் ஆய்வுக்கட்டுரைகள் மற்றும் அறிவியல் ஆய்வறிக்கைகள் சமர்ப்பித்தல் போன்ற அறிவியல் சிந்தனையை தூண்டும் வகையில் மாணவர்களை தொடர்ந்து ஈடுபடுத்தியதற்காகவும் நல்லாசிரியர் விருது அவருக்கு வழங்கப்பட்டது.

நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியை சத்யாவை தஞ்சாவூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சிவகுமார், பட்டுக்கோட்டை கல்வி மாவட்ட அலுவலர் திராவிட செல்வன் ஆகியோர் பாராட்டினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in